இலங்கை மீதான மனித உரிமைமீறல் விசாரணைக்கு உதவத் தயார் : அமெரிக்கா
அதேவேளை, இலங்கை அரசாங்கமும், மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் தமிழர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படவேண்டும் என்றும் அமெரிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமரிக்க ராஜாங்க திணைக்களத்தின், நாளாந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அமெ. பொதுமக்கள் விவகாரங்களுக்கான பிரிவின் உதவிச்செயலாளர் பிலிப் ஜே க்ரெளலி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
முன்னர் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்றும் அமெரிக்க தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக பிலிப் க்ரௌலி மேலும் குறிப்பிட்டுள்ளார்







0 Response to "இலங்கை மீதான மனித உரிமைமீறல் விசாரணைக்கு உதவத் தயார் : அமெரிக்கா"
แสดงความคิดเห็น