புலிகள் எரித்திரியாவிடம் ஆயுதக் கொள்வனவுக்கு நோர்வே ஒத்துழைப்பு வழங்கியதாம்: கொழும்பு ஆங்கில பத்திரிகை தகவல்

சீனாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்து அவற்றை எரித்திரியா புலிகளுக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எரித்திரிய பிரதிநிதிகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சந்திப்புக்களை நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஒழுங்கு செய்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடு ஒன்றில் குழப்ப நிலையை ஏற்படுத்த நோர்வே அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து சர்வதேச நாடுகள் விசாரணை நடத்த வேண்டுமென அரசாங்கத் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் எரித்திரியாவுடனான தொடர்பு ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் கடற்படை வளத்தை அதிகரிக்கவும் நோர்வே ஒத்துழைப்பு வழங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது.
யுத்த நிறுத்தக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நோர்வே அரசாங்கம் பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
0 Response to "புலிகள் எரித்திரியாவிடம் ஆயுதக் கொள்வனவுக்கு நோர்வே ஒத்துழைப்பு வழங்கியதாம்: கொழும்பு ஆங்கில பத்திரிகை தகவல்"
แสดงความคิดเห็น