இன்று நடைபெறவிருந்த ஹிஸ்புல்லாஹ் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் ஒத்திவைப்பு
கிழக்கு மாகாணசபையில் இன்று சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக இன்று விவாதத்திற்கு எடுக்கப்படவிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதத்திற்கு எடுக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி தலைவர்களுக்கு இடையில் இணக்கமின்மை காரணமாக இந்த விவாதம் இன்று நடைபெறவில்லை. அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தின் பிறிதொரு தினத்திற்கு அந்த விவாதம் பிற்போடப்படவுள்ளது.
எனவே இன்று ஹிஸ்புல்லாஹ் தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு மாகாண சுகாதார தொண்டர் நியமன விடயத்தில் தலையிட்டமை உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஹிஸ்புல்லாஹ் மீது சுமத்தப்பட்ட நிலையில் அவர் மீது ஐக்கிய தேசியக்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை ஹிஸ்புல்லாஹ் மறுத்துள்ளார்.
0 Response to "இன்று நடைபெறவிருந்த ஹிஸ்புல்லாஹ் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் ஒத்திவைப்பு"
แสดงความคิดเห็น