jkr
แสดงบทความที่มีป้ายกำกับ கிழக்கு แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ கிழக்கு แสดงบทความทั้งหมด

கிழக்கு மாணவர்களுக்கு சைக்கிள் விநியோகம் : முதல் கட்டம் நேற்று நிறைவு


கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய பிரதேச பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆரம்பித்துள்ள மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தின் முதலாவது கட்டம் நிறைவடைந்துள்ளது.

வட மாகாணத்தில் 500 பாடசாலை மாணவர்களுக்கு முதற்கட்டமாக சைக்கிள்கள் வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு நடுப்பகுதியில் மூதூர் கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டு, நேற்று மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் நிறைவடைந்தது.

இதன் பிரகாரம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச பாடசாலைகளைச் சேர்ந்த 78 மாணவர்களுக்கு கண்ணன்குடா மகா வித்தியாலய மண்டபத்தில் நடை பெற்ற வைபவத்தில் மாகாண சபை உறுப்பினர்களான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் ஆகியோர் வைபவ ரீதியாக சைக்கிள்களை மாணவர்களுக்குக் கையளித்தனர்.

இந்த ஆண்டும் இத்திட்டத்தை இரண்டாவது கட்டமாக அமுல்படுத்த முதலமைச்சர் உத்தேசித்துள்ளதாக மாகாண சபை உறுப்பினர்கள் தமது உரைகளின் போது தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் வலய கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஈ. போல், முதலமைச்சரின் மீள்குடியேற்ற இணைப்பாளர் அ.செல்வேந்திரன் ஆகியோர் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

திருமலை - கல்லோயா இடையில் ரயில் பஸ் சேவை ஆரம்பம்


இந்திய அரசாங்கம் கிழக்கு மாகாண சபைக்கு வழங்கிய பஸ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இரண்டாவது ரயில் பஸ் திருகோணமலைக்கும் கல்லோயாவுக்குமிடையில் சேவையை ஆரம்பித்துள்ளது.

இதற்கென கிழக்கு மாகாண சபைக்கு 10 பஸ்களை வழங்கிய இந்திய அரசு அவற்றின் மூலம் 5 ரயில் பஸ்களைத் தயாரிப்பதற்கான நிதி உதவிகளையும் வழங்கியுள்ளது.

ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள முதலாவது ரயில் பஸ் தற்போது மட்டக்களப்புக்கும் - பொலன்னறுவைக்குமிடையில் சேவையில் ஈடுபட்டுள்ளது.

இரண்டாவது ரயில் பஸ் திருகோணமலைக்கும் கல்லோயாவுக்குமிடையில் சேவையில் ஈடுபடுத்தும் ஆரம்ப வைபவம் திருமலை ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், மத்திய போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமா மற்றும் தேச நிர்மாண அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வைபவ ரீதியாக சேவையை ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்,

"கிழக்கு மாகாணத்தில் போக்குவரத்துத் துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் இந்திய அரசாங்கம் பஸ்கள் மட்டுமல்ல, 44 மில்லியன் ரூபா நிதி உதவியும் வழங்கியுள்ளது" என்றார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கிழக்கில் முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றன -புலனாய்வு பிரிவினர்!


கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களில் முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் தொடர்ச்சியாக இயங்கி வருவதாக புலனாய்வு பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக மட்க்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இந்த ஆயுதக்குழுக்கள் இயங்கி வருவதாக சுட்டிக் காட்டப்படுகிறது. காத்தான்குடி, கல்முனை, அக்கறைப்பற்று, பொத்துவில், சம்பாந்துறை போன்ற பகுதிகளை மையமாக கொண்டு குறித்த முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயுதங்களை களையுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதிலும் மிகவும் குறைந்தளவு ஆயுதங்களே பாதுகாப்பு தரப்பினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆயுதக்குழுக்களுக்கு கிழக்கைச் சேர்ந்த சிலஅரசியல் பிரமுகர்களின் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் மக்கள் எவ்வித அச்சுறுத்தல்களும் இன்றி சுதந்திரமாக வாக்களிக்கக் கூடிய சூழ்நிலை தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ளது.- நாகலிங்கம் திரவியம் ( ஜெயம் )


எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் மக்கள் எவ்வித அச்சுறுத்தல்களும் இன்றி சுதந்திரமாக வாக்களிக்கக் கூடிய சூழ்நிலை தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியம் ( ஜெயம் ) கூறுகின்றார்.

மாகாண முதலமைச்சர் நிதியிலிருந்து வாழைச்சேனை மற்றும் வாகரைப் பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 140 பேருக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் வைபவங்களில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் கூறினார்.

வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 50 பேருக்கும் ,வாகரைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 90 பேருக்கும் தலா ரூபா 10 ஆயிரம் என வாழ்வாதார நிதி உதவி இத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வுகளில் தொடர்ந்தும் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியம் (ஜெயம் )

” கடந்த 25 வருடங்களாக எமது பிரதேசங்களில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக மக்கள் சுதந்திரமாக எதனையும் சிந்தித்து செயல்படக் கூடிய சூழ்நிலை இருக்கவில்லை.

ஆனால் இப்போது அந்த நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு மக்கள் எதனையும் சுதந்திரமாக சிந்தித்து செயல்படக் கூடிய சூழ்நிலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஏற்படுத்தியிருக்கின்றார்.

இந் நிலையில் எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் நாம் சுதந்திரமாக வாக்களிக்கும் போது அதனை நன்றியுடன் நினைவு கூறிக் கொள்ள வேண்டும் .

கடந்த மாகாண சபைத் தேர்தலில் எமது மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் ஒரு பகுதியினர் வாக்களிப்பில் ஆர்வம் காட்டவில்லை.அதனுடைய தாக்கத்தை இப்போது நாம் அனுபவித்து வருகின்றோம்.அப்படியான தவறுகளை எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் விடக் கூடாது.

கடந்த கால தேர்தலிகளிலே ஆயுதங்கள் தாங்கியவர்களின் அழுத்தங்கள் காரனமாக மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாதிருந்ததாக ஒரு கருத்து இருந்தது.ஆனால் இப்போது அப்படி யாரும் கூற முடியாது” என்றும் குறிப்பிட்டார்

இந் நிகழ்வுகளில் வாகரைப் பிரதேச செயலாளர் ஆர.;ராகுலநாயகி ,வாழைச்சேனை எதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு ,பிரதேச சபை உறுப்பினர் க.நவராசலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கி.மா.சபை போனஸ் ஆசனத்திற்கு த.ம.வி.பு. உறுப்பினர் நியமனம் - (படங்கள் இணைப்பு)

கிழக்கு மாகாண சபையில் கடந்த ஒன்றரை வருடங்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட போனஸ் ஆசனத்திற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு முன்னாள் அரசாங்க அதிபர் இரத்தினம் மௌனகுருசாமி இப்பதவிக்கு ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த போதிலும், லண்டனில் தங்கியிருக்கும் அவர் நாடு திரும்பி அப்பதவியை ஏற்க முன்வராத காரணத்தினால் இவ்வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.

அண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, இவ்வெற்றிடம் தமது கட்சி உறுப்பினர் ஒருவர் மூலம் நிரப்பப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

கடந்த மாகாண சபைத் தேர்தலில் த.ம.வி.பு கட்சியின் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்ட இவர் கிழக்கு மகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மக்கள் விடுதலை இராணுவத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-எதிர்க்கட்சிகள்!


கிழக்கில் புதிதாக உருவாகியுள்ளதாகக் கூறப்படும் மக்கள் விடுதலை இராணுவம் என்ற ஆயுதக் குழுவை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. குறித்த ஆயுதக் குழுவினை இல்லாதொழிக்கும் வகையிலான இராணுவ நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் பொதுவான வேட்பாளர் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை இல்லாதொழிப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாக நம்பகத் தகுந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். மனித உரிமைகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் நடத்தப்பட்ட ஊடகவயிலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜே.வி.பி தலைவர்களை இல்லாதொழிப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கை கிழக்குப் பகுதியில்மார்க்ஸீசிய தமிழ் போராட்டக் குழு?


பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் மற்றும் கியூபாவுடன் தொடர்புடைய மார்க்ஸீசிய தமிழ் போராட்டக் குழு, இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஆறு மாதங்களின் பின்னர் கிழக்குப் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு புதிய அழுத்தங்களை பிரயோகிக்கவிருப்பதாக த டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) என்ற அமைப்பு ஒன்று கிழக்கு மாகாணத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்ததாகவும் இது தனித் தமிழ் நாடு ஒன்றை கோரி அரசாங்கத்துக்கு எதிரான தாக்குதல்களை நடத்தவிருப்பதாகவும் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மக்கள் விடுதலை இராணுவத்தின் கட்டளைத் தளபதி என கூறும் கோணேஸ் என்பவர், இந்த யுத்தம் இன்னும் நிறைவடையவில்லை என தெரிவித்திருப்பதாக டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், தமிழர்களுக்கு உண்மையில் தீர்வு ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ள அவர், இதன் நிமித்தமே இந்த இராணுவத்தை தொடக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தாம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி, வடக்கிழக்கு மாகாணத்தை தனி தமிழ் ஈழமாக மீட்போம் என அவர் டைம்ஸ் சஞ்சிகைக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மக்கள் விடுதலை இராணுவம் விரைவில் தமது தாக்குதல்களை ஆரம்பிப்பர் எனவும் தமக்கு தெரிவித்துள்ளதாக த டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை தாம் தமீழ விடுதலைப் புலிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இராணுவக் குழு என தெரிவித்துள்ள கோணேஸ், எனினும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களும் இதில் இணைந்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.

தமது அமைப்பில் தற்போது 300 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாகவும் எதிர்வரும் காலங்களில் 5000 உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது அமைப்பிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும் மக்கள் விடுதலை இராணுவத்தின் அரசியல் கொள்கையை ஏற்றுக்கொள்ளுவோர் இணைந்து கொள்வதில் தடையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் தீவிரவாத இயக்கம் எனவும் அந்த அமைப்பு முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இயக்கத்திற்கு பலஸ்தீன விடுதலை இயக்கம் இந்தியாவின் மாவோயிஸ்ட் மற்றும் கியூபா ஆகியவற்றுடன் தொடர்பு இருப்பதாக செய்தியில்

தெரிவிக்கப்பட்டுள்ளது Liberation Army emerges in Eastern Sri Lanka- Report

A Marxist group of Tamil militants with connections to the Palestinian Liberation Organisation and Cuba is preparing to mount a new insurgency in Sri Lanka six months after the Government declared an end to the 26-year-old war, the Times UK publication reported.

The People’s Liberation Army (PLA) was founded in eastern Sri Lanka four months ago and has vowed to launch attacks against government and military targets unless its demands for a separate Tamil homeland are met.

“This war isn’t over yet,” Commander Kones, head of the PLA’s Eastern District military command, told The Times during a night meeting in a safe house in the east of the country last week.

“There has been no solution for Tamils since the destruction of the LTTE [Tamil Tigers] in May. So we have built and organised the PLA and are ready to act soon. Our aim is a democratic socialist liberation of the northeast for a Tamil Eelam [the desired Tamil state].”

Kones, a nom de guerre, claimed that the PLA had 300 active members and expected to recruit 5,000 volunteers from the 280,000 Tamil civilians recently freed from detention camps.

He said that the PLA, commanded by a ten-man committee, was an entirely separate organisation from the LTTE, but said that former LTTE cadres would be able to join the organisation provided that they swore their allegiance to the PLA’s political aims.

“There are former LTTE members in the PLA now,” he said. “But the LTTE was an extremist organisation that fought only for itself rather than the people’s needs.

“It is totally destroyed now and I don’t worry about it. We are socialist ideologues and we are trying to draw different Tamil groups together for a people’s struggle, a people’s war.”

Although the PLA’s capabilities remain unclear, it includes in its ranks several experienced insurgents who fought against the government forces in Sri Lanka in the 1980s before falling foul of the LTTE and either leaving the country or becoming dormant.

Commander Kones, now in his forties, had himself been given guerrilla training at a camp in Uttar Pradesh, India, in 1983, where his trainers included fighters from the Palestinian Liberation Organisation (PLO).

“We still have a relationship with the PLO, as well as Cuba and Indian Maoist groups,” he said.

“They fight for their rights just as we do.”

During later action against government forces in eastern Sri Lanka he was imprisoned and tortured, before escaping from the country to live in Europe.

The threat of an aspiring new Tamil insurgent group comes at a complicated time for the Sri Lankan authorities.The unified image that accompanied their decisive victory over the Tamil Tigers in May has been eroded. The architect of that victory, General Sarath Fonseka, has become embroiled in a political scrap with the incumbent President Mahinda Rajapaksa as both men vie for a presidential election victory next month.

Their rivalry could split the vote of the Sinhalese majority, offering the swing vote to the country’s Tamil minority, who have yet to declare their political allegiance.

A new round of violence during this period could have a dramatic reversal on efforts to stabilise the country.

“We are much more politically skilled than the LTTE ever were and know how to avoid the ‘terrorist’ label that they acquired,” Kones said.

“Our enemy is simply the Government here, and we fight just for Tamil rights. We are not against the international community,” he said. “Indeed, we want them to support us in pressurising the Sri Lankan Government.”

Kones said that he had no intention of trying to emulate the Tigers’ style of warfare, but suggested a more asymmetric strategy involving attacks by widely dispersed PLA cells. However, he added that his targets would include economic and administrative centres, as well as military forces.

Other PLA insiders said that one of their likely first fights would be with groups of former LTTE cadres led by the infamous Colonel Karuna. Karuna split from the LTTE ranks in 2004 and later joined the Government, but still holds influence in eastern Sri Lanka.

“We are getting stronger by the day, much stronger than any other group,” Kones said. “The day of action is close.”

A few nights after meeting Commander Kones, deep in a rural area, The Times encountered three young PLA recruits waiting for a guide to take them to one of the organisation’s jungle training camps.

Two were 15 years old, one was 16. “The PLA sound very interesting to us,” they said. “They are the only ones now doing something for the Tamil people.”

Theirs was not, however, a pervading sentiment. Shattered by their experiences in the war zones this year, depressed by their subsequent incarceration in detention camps, few Tamils expressed any great enthusiasm for a return to war.

“I’m not interested in Eelam,” Raja Muragaswaran, 31, who was released from a camp last month, said.

“I lost everything that I had ever worked for in the name of Eelam. How many died for Eelam, and all for what? We just want peace.”

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மீள்குடியமர்த்தப்பட்ட மாணவர்கள் பாடசலை செல்வதில் உள்ள போக்குவரத்து தடையை நீக்கும் பொருட்டு துவிச்சக்கர வண்டிகள்


கிழக்கு மாகாணத்தில் யுத்த சூழ்நிலையால் இடம்பெயர்ந்து தற்போது மீள்குடியளமர்த்தப்பட்டுள்ள மூதூர் பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் வைபவம் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரின் மீள்குடியேற்ற அதிகாரி திரு. அ. செல்வேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டது. முதற்கட்டமாக சுமார் 500 துவிச்சக்கர வண்டிகள் இன்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் கிழக்கு மகாண முதலமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி திருமதி ஜுடி தேவதாஷன் மற்றும் இணைப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கிழக்கில் 9,95,612 பேர் வாக்களிக்கத் தகுதி


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது கிழக்கு மாகாணத்தில் 9 லட்சத்து 95 ஆயிரத்து 612 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

திருகோணமலை மாவட்டம் திருகோணமலைத் தொகுதி - 86 ஆயிரத்து 685 பேர் ,சேருவில தொகுதி -69 ஆயிரத்து 47 பேர் ,மூதூர் தொகுதி - 85 ஆயிரத்து 401 என 2 லட்சத்து 41 ஆயிரத்து 133 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் அம்பாறைத் தொகுதியில், ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 479 பேர்,பொத்துவில் தொகுதி -ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 779 பேர், கல்முனைத் தொகுதி - 66 ஆயிரத்து 135 பேர்,சம்மாந்துறைத் தொகுதி - 71 ஆயிரத்து 442 பேர் என 4 லட்சத்து 20 ஆயிரத்து 835 பேர் வாக்களிகத் தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு தொகுதி - ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 135 பேர் .பட்டிருப்புத் தொகுதி 80 ஆயிரத்து 972 பேர் ,கல்குடாத் தொகுதி 97 ஆயிரத்து 537 பேர் என மொத்தம் 3 லட்சதது 33 ஆயிரத்து 644 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கிழக்குக் கடலில் தத்தளித்த 12 மியன்மார் மீனவர்கள் மீட்பு


கிழக்கு கடலில் தத்தளித்த 12 பேரைக் கொண்ட மியன்மார் மீனவர் குழுவொன்று இலங்கை மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

திருகோணமலைக்கு அண்மித்த பகுதியில் இவர்களின் மீன்பிடிக்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்தது. அவ்வேளை, குறித்த மீனவர்களினால் அபாயக் குரல் எழுப்பப்பட்டதாகவும்,இதனையடுத்து அங்கு விரைந்த மீனவர்கள் நேற்று மாலை 12 மியன்மார் மீனவர்களையும் காப்பாற்றி மீட்டு வந்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

மேற்படி மீனவர்களிடம் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஆவணங்கள் எதுவும் இல்லாத போதிலும் மீன்பிடிக்கலத்திலிருந்த ஆவணங்கள் மூலம் இம்மீனவர்கள் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாகத் திருகோணமலை பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கிழ. மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக எடிசன் குணதிலக்க நியமனம்


மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய எடிசன் குணதிலக்க இன்று முதல் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எடிசன் குணத்திலக்க பதவி உயர்வு பெற்று செல்வதை முன்னிட்டு மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று காலை அணி வகுப்பு மரியாதையுடன் இது தொடர்பான வைபவமொன்றும் நடைபெற்றது.

பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக முன்றலில் அமைந்துள்ள வீரமரணமடைந்த பொலிஸாரின் நினைவுத் தூபிக்கும் இவர் அஞ்சலி செலுத்தினார்.

பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.கே. மார்க்கஸ் உட்பட பொலிஸ் அத்தியட்சகர்கள் ,உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் என பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கி.மா.ச. வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு


கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, காணி மற்றும் போக்குவரத்து அமைச்சு மீதான குழு நிலை விவாதம் இன்று நடைபெற்ற போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையை விட்டு வெளி நடப்பு செய்துள்ளனர்.

மாகாண கல்வி அமைச்சினால் முறைகேடான முறையில் சிற்றூழியர் நியமனம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஐ.தே.க., ஸ்ரீல.மு.கா, ஈ.பி.ஆர்.எல்.(பத்மநாபா அணி),ஜே.வி.பி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களே வெளி நடப்புச் செய்தனர்.

கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் நேற்று முதல் நடைபெற்று வருகின்றது.

சபை முதல்வர் கே.எம்.எம். பாயிஸ் தலைமையில் இன்று சபை கூடிய போது கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்கா தமது அமைச்சுக்கள் மீதான வரவு செலவுத்திட்டத்தை குழுநிலை விவாதத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார்.

அமைச்சர் உரையாற்றிய பின்பு எதிர்க்கட்சி சார்பில் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம்,

"நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சினால் ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள சிற்றூழியர்கள், காவலாளிகள் மற்றும் சுகாதார சிற்றூழியர்கள நியமனங்கள் அரச நியமன விதிமுறைகளுக்கு புறம்பானது" என ஆட்சேபனை தெரிவித்தார்.

நேற்று இது தொடர்பாக சபையில் கேள்வி எழுப்பப்பட்ட போது அப்படி நியமனம் வழங்கப்படவில்லை என அமைச்சர் கூறி விட்டு இப்படி நியமனம் வழங்கியிருப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.

இந்நியமனம் விதிமுறைகளுக்கு மாறாக வழங்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்து தாம் வெளிநடப்புச் செய்யத் தீர்மானித்துள்ளதாகவும் இரா.துரைரத்தினம் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கிழக்கு மாகாண சபையின் வரவி-செலவுத் திட்டத்தை தோற்கடித்து செயற்பாடுகளை முடக்க முயற்சி


கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடித்து, அதன் செயற்பாடுகளை முடக்குவதற்கும் முதலமைச்சரை மாற்றுவதற்குமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கிழக்கு மாகாண சபையின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கிழக்கு மாகாண சபையின் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதி இது வாக்கெடுப்புக்காக விடப்படும் போது எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலரும் எதிராக வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளனரெனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையில் 19 பேர் ஆளும் கட்சியில் உள்ளனர். எதிர்க்கட்சித் தரப்பில் 17 பேர் தெரிவு செய்யப்பட்டாலும் ஒருவர் தொடர்ந்தும் சபை அமர்வுகளில் கலந்து கொள்ளாததன் காரணமாக 16 பேரே உள்ளனர். இந்த நிலையில் ஆளுந்தரப்பைச் சேர்ந்த நால்வரின் உதவியுடன் வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பது தொடர்பில் எதிர்க் கட்சித் தரப்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எச். எம். எம். பாயிஸ் வீரகேசரி வார வெளியீட்டுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

இது தொடர்பில் பலர் என்னுடன் தொடர்பு கொண்டு கேட்டனர். இவ்வாறானதொரு நிலை கிழக்கு மாகாண சபைக்கு ஏற்படக் கூடாது. அவ்வாறு ஏற்பட்டாலும் கிழக்கு மாகாண சபையைக் கலைக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் மாகாண சபை நிதியை எந்தவிதத்திலும் பயன்படுத்த முடியாத ஒரு முடங்கல் நிலையேற்படும். நிர்வாக ரீதியாகவும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.

ஜனாதிபதியினது அல்லது மத்திய அரசின் நிதியினைக் கொண்டே அனைத்தையும் செய்ய வேண்டிய நிலைக்குள் மாகாண சபை தள்ளப்படும். கிழக்கு மாகாண சபையின் இந்த வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமானால் எதிர்காலத்தில் வேறு பிரேரணைகளையும் நிறைவேற்றிக் கொள்வதிலும் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடலாமெனவும் கூறினார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கிழக்கில் மீள்குடியேற்றப்பட்டவர்கள் வெள்ளை வேனில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்-தமிழ் தேசிய கூட்டமைப்பு சபையில் வலியுறுத்தல்


கிழக்கில் மீள்குடியேற்றப் பணிகள் நிறைவடைந்திருப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில், அங்கு குடும்பத் தலைவர்களும் அங்கத்தவர்களும் வெள்ளை வேனிலும், மோட்டார் சைக்கிளிலும் அழைத்துச்செல்லப்படுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் பெண்களுடன் தகாத முறையில் நடந்துகொள்ளும் முயற்சிகளும் அதிகரித்துள்ளன. இந்த அசிங்கமான நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. துரைரெட்ணசிங்கம் நேற்று சபையில் கோரிக்கை விடுத்தார்,

சீருடையில் வருபவர்களால் கைதுசெய்யப்பட்டால் அவ்வாறு கைதுசெய்யப்படுவோர் வீடு திரும்புவர் என்று நம்பிக்கை கொள்ள முடியும். ஆனால், கிழக்கில் அந்த நிலை இல்லை. வருபவர்கள் உண்மையான புலனாய்வுத்துறையினரா அல்லது பணம் பறிப்பவர்களா என்பதை இனங்காண முடியாதுள்ளவர்களாக கிழக்கு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.,

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கான 750 மில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே துரைரெட்ணசிங்கம் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வவுனியா முகாம்களில் இருந்த மூன்று இலட்சம் மக்களில் அரைவாசிப் பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். பலர் சொந்த இல்லங்களிலும் இன்னும் பல உறவினர்களின் வீடுகளுக்கும், மேலும் சிலர் பொது இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்,

இதன்மூலம் மழையின் பாதிப்புக்களில் இருந்து அந்த மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஓரளவு ஆறுதல் கொள்ள முடிகின்றது. எனினும் முகாம்களில் வாழ்கின்ற மக்கள் சிறை வாழ்க்கை வாழக்கூடாது என்றும் கௌரவமான வாழ்க்கையொன்றே தமக்குத் தேவையானது என்றுமே விரும்புகின்றனர்.
<>br> நிவாரணக் கிராமங்கள் மற்றும் மீள்குடியேற்றப் பிரதேசங்களுக்கு எமது கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் சென்று ஆராய்ந்து வந்துள்ளனர். இதனூடாக அங்குள்ள சாதக பாதக நிலைமைகளை எமக்கு அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது,

இருந்தும் இங்கிருக்கின்ற வேதனையான விடயம் என்னவென்றால் மீள்குடியமர்த்தப்பட்டதன் பின்னரும் புலனாய்வுத்துறையினர் என்ற பெயரால் குடும்பத் தலைவர்கள் கைதுசெய்யப்படுவதுதான்.யாரால் கைது செய்யப்படுகின்றனர்? எங்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர் என்று தெரியாது. இது குறித்த தகவல்களும் அறிவிக்கப்படுவதில்லை. கைதுகள் இடம்பெறும் போது அது குறித்து சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ள மீள்குடியேற்றப் பணிகளில் திருப்தி கொள்ள முடியாதிருக்கின்றது. ,

கிழக்கு மாகாண மீள்குடிற்றக் குறைபாடுகள் தொடர்பில் நாம் பலமுறை இந்த சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளோம். எமது குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் உட்பட சகோதர உறுப்பினர்களும் இவ்விடயம் தொடர்பில் சபையில் தெரிவித்துள்ளனர்.அந்த சந்தர்ப்பங்களில் உரிய அமைச்சர்கள் சபையில் இருப்பதில்லை. ஆனால், கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்தில் நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பில் தமக்குத் தெரியாது என்றும், அது குறித்து தமக்கு அறிவிக்கவில்லை என்றும் தகவல்துறை அமைச்சர் கூறுகின்றார்,

அமைச்சர்களின் நிலைப்பாடுகளை நோக்கும்போது, எமது மக்களுக்கான தேவைகள் தொடர்பில் அக்கறையீனம் காட்டப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலைமையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். கிழக்கில் ஒரு சீரான மீள்குடியேற்றம் இல்லை. அங்கு குடியேற்றப்பட்டவர்களுக்கு உலக உணவுத்திட்டத்தின் கீழ் அரிசி, சீனி மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய நான்கு வகையான பொருட்கள் மாத்திரமே விநியோகிக்கப்படுகின்றன. ஏனைய உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான வசதி வாய்ப்புகள் அவர்களிடம் இல்லை. தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதற்கான சூழல் இல்லை. அவல வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கும் அவர்களில் பலர் கைதுசெய்யப்படுகின்றனர். கைது செய்யப்படுவோரை விடுவித்துக் கொள்வதில் பணம் பறிக்கப்படும் நிலையும் காணப்படுகின்றது. இன்று புலிகளின் பெயரைப் பாவித்தே கைதுகள் இடம்பெற்று வருகின்றன.,

விரும்பியோ, விரும்பாமலே அந்த மக்கள் புலிகளின் பிரதேசங்களில் வாழக்கூடிய நிலை ஏற்பட்டிருந்தது. இதனை அரசாங்கம் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

புலிகளின் கிழக்கு தளபதி ராம் கைது!


புலிகளின் கிழக்கு தளபதி ராம் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை 7ம் திகதி பொலனறுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட ராம் படையினரின் பிடியில் இருந்து தப்பியோடியதை தொடர்ந்து அப்பகுதியில் 3000க்கு மேற்பட்ட படையினர் தேடுதல் மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து மின்னேரியா தாங்கிக்கு அண்மையில் உள்ள காட்டு பகுதியில் வைத்து மீளவும் ராம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருணா புலிகள் இயக்கத்தைவிட்டு வெளியேறியதை தொடர்ந்து கிழக்கில் புலிகளின் தளபதியாக நியமிக்கப்பட்ட ராம் படையினருக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தார். வடக்கில் இருந்து சில உறுப்பினர்களுடன் வெளியேறியிருந்த ராம் தனது உறுப்பினர்கள் பலரை விசேட அதிரடிப்படையினரின் தாக்குதலில் பலிகொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கிழக்கு ஆயுதக்குழுக்கள் ஆயுதங்களை கையளிக்க மற்றொரு பொதுமன்னிப்புக்காலம் அறிவிப்பு!


கிழக்கு ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைவதற்கு மற்றொரு தடவை பொதுமன்னிப்பை அறிவித்து மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்க படையினர் தீர்மானித்துள்ளனர். இதன்பிரகாரம் எதிர்வரும் 03வாரங்களுக்குள் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு ஆயுதக் குழுக்களுக்கு படைத்தரப்பினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வரும் அதேவேளை கிழக்கு முஸ்லிம் ஆயுதக் குழுக்களிடம் பெருந்தொகையான ஆயுதங்கள் காணப்படுவதாகவும், அதில் சிறியளவே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக்க கூறியுள்ளார். இதேவேளை, முஸ்லிம் ஆயுதக் குழுவொன்றின் தலைவரான கஜூ சமட் என்பவர் ஆயுதங்களை கையளித்து சில தினங்களில் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

காத்தான்குடியில் நடமாடும் வைத்திய சேவை


சர்வதேச 'சிராஜ்' தர்ம ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் ஸ்ரீ லங்கா ஜாமா அத்தே இஸ்லாமிய பயிற்சி மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற நடமாடும் வைத்திய சேவையில் நூற்றுக் கணக்கானோருக்கு வைத்திய சிகிச்சையளிக்கப்பட்டது.

காத்தான்குடி கமநல சேவை நிலைய மண்டபம் ,மற்றும் அல் ஹிரா வித்தியாலய மண்டபம் ஆகியவற்றில் இந்த வைத்திய முகாம் எற்பாடு செய்யப்பட்டிருந்தது.இம்முகாமில் வைத்திய சிகிச்சையுடன் வைத்திய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கிழ.பல்கலைக்கழகம்: 2008-2009 ஆம் கல்வி ஆண்டிற்கு 887 மாணவர்களில் 683 மாணவர்கள் மட்டுமே பதிவு


கிழக்கு பல்கலைக்கழத்திற்கு 2008-2009 ஆம் கல்வி ஆண்டில் அனுமதி பெற்றுள்ள 887 மாணவர்களில் 683 மாணவர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

கலை,கலாச்சாரம் ,விஞ்ஞானம் ,வர்த்தக முகாமைத்துவம் ,விவசாயம் ,சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானம் ஆகிய ஆறு பீடங்களுக்கும் பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் 887 மாணவர்கள் அனுமதிக்காக தெரிவாகியிருந்தனர்.

பல்கலைக்கழக நிர்வாகத் தகவல்களின் படி கலை ,கலாச்சார பீடத்திற்கு 355 மாணவர்கள் தெரிவாகியுள்ள போதிலும் 315 மாணவர்களே பதிவு செய்துள்ளனர்.

விவசாய பீடத்திற்கு தெரிவாகியுள்ள 84 மாணவர்களில் 45 மாணவர்களும் ,வர்த்தக ,முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவான 260 மாணவர்களில் 196 மாணவர்களும் ,விஞ்ஞான பீடத்திற்கு தெரிவாகியுள்ள 103 மாணவர்களில் 48 மாணவர்களும் பதிவு செய்துள்ளனர்.

சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான (மருத்துவ) பீடத்திற்கு 85 மாணவர்கள் அனுமதிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும் 81 மாணவர்களே பதிவு செய்துள்ளனர். சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட விரிவுரைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வரும் அதேவேளை ஏனைய பீடங்களுக்கான விரிவுரைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மரமொன்றிலிருந்து நுரைநுரையாக பால்.. ஆலமரமொன்றில் பிள்ளையார் வடிவம்.. வரண்ட மேட்டு நிலப்பகுதியில் திடீரென நீர் ஊற்று.. அழிந்து கிடந்த கிழக்கில் தொடரும் அதிசயங்கள்!!!


கிழக்கு மாகாணத்தில் அடுத்தடுத்து தொடரும் அதிசயங்களினால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, இவைகளையிட்டு இன்னும் சிலர் “முன்னயதிலும் பார்க்க பயபக்தியுடன்” காணப்படுவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது. கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வந்தாறுமூலை எனுமிடத்திலுள்ள கண்ணகி அம்மன் ஆலயத்திற்குள் இருந்து இடையிடையே சலங்கை ஒலிச் சத்தம் கேட்டவண்ணம் இருந்துள்ளது. வருடமொன்றிற்கு ஒருமுறையே திறந்து மூடப்படும் அவ்வாலயத்தின் மூலஸ்தான கதவுகள் இறுக்கமாக மூடப்பட்டிருக்கின்ற நிலையில் உள்ளிருந்து வரும் சலங்கை ஒலிச் சத்தங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வியப்புடன் கூடிய ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மக்கள் சாரிசாரியாகச் சென்று அவ் ஒலியைக் கேட்டு பயபக்தியுடன் திரும்பியுள்ளனர். இதேவேளை இம்மாத முற்பகுதியில் அம்பாறை மாவட்டத்திலுள்ள காஞ்சிரன்குடா வயற்பகுதியில் வரண்ட மேட்டு நிலப்பகுதியில் திடீரென நீர் ஊற்று ஆரம்பித்துள்ளது. அதனையடுத்து, அப்பகுதியில் சிறிய ஆலயமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் திருக்கோவில் பகுதியிலுள்ள மரமொன்றிலிருந்து நுரை நுரையாக பால் வடிய ஆரம்பித்துள்ளது. அதேபோல் கோமாரிப் பகுதியிலுள்ள ஆலமரமொன்றில் பிள்ளையார் வடிவமும் தோன்றியுள்ளதாம். இவற்றைக் காண தினமும் மக்கள் பெரும் திரள்திரளாக கூடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சேதமடைந்த மத வழிபாட்டு தளங்களை புனரமைக்க நடவடிக்கை


பயங்கரவாத நடவடிக்கை காரணமாக சேதமடைந்த மத வழிபாட்டு தளங்களை புனரமைப்பது குறித்து ஒருவார காலத்துக்குள் அறிக்ககையொன்றை சமர்ப்பிப்பதற்கான அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இன்று அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் கட்சி புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கும் வகையில் அம்பாறை சென்றல் கேம்ப் பகுதிக்கு விஜயம்; செய்த கட்சியின் தலைவரும்.அமைச்சருமான றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.

அதே வேளை இப்பிரதேசத்தில் எற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினைக்கான தீர்வை காண்பது குறித்து தமது கவனத்தை தாம் செலுத்தவுள்ளதாகவும்,அமைச்சர் றிசாத் பதியுதீன் அங்கு கூறினார்.

இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் எஸ்.நிஜாமுதீன்,கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா,கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.ஒலுவில்,கல்முனைப் பகதிகளுக்கு அமைச்சர் விஜயம் செய்திருந்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates