திருமலை - கல்லோயா இடையில் ரயில் பஸ் சேவை ஆரம்பம்
இந்திய அரசாங்கம் கிழக்கு மாகாண சபைக்கு வழங்கிய பஸ்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இரண்டாவது ரயில் பஸ் திருகோணமலைக்கும் கல்லோயாவுக்குமிடையில் சேவையை ஆரம்பித்துள்ளது.
இதற்கென கிழக்கு மாகாண சபைக்கு 10 பஸ்களை வழங்கிய இந்திய அரசு அவற்றின் மூலம் 5 ரயில் பஸ்களைத் தயாரிப்பதற்கான நிதி உதவிகளையும் வழங்கியுள்ளது.
ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள முதலாவது ரயில் பஸ் தற்போது மட்டக்களப்புக்கும் - பொலன்னறுவைக்குமிடையில் சேவையில் ஈடுபட்டுள்ளது.
இரண்டாவது ரயில் பஸ் திருகோணமலைக்கும் கல்லோயாவுக்குமிடையில் சேவையில் ஈடுபடுத்தும் ஆரம்ப வைபவம் திருமலை ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், மத்திய போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமா மற்றும் தேச நிர்மாண அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வைபவ ரீதியாக சேவையை ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்,
"கிழக்கு மாகாணத்தில் போக்குவரத்துத் துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் இந்திய அரசாங்கம் பஸ்கள் மட்டுமல்ல, 44 மில்லியன் ரூபா நிதி உதவியும் வழங்கியுள்ளது" என்றார்
0 Response to "திருமலை - கல்லோயா இடையில் ரயில் பஸ் சேவை ஆரம்பம்"
แสดงความคิดเห็น