கிழக்கில் முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றன -புலனாய்வு பிரிவினர்!
கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களில் முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் தொடர்ச்சியாக இயங்கி வருவதாக புலனாய்வு பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக மட்க்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இந்த ஆயுதக்குழுக்கள் இயங்கி வருவதாக சுட்டிக் காட்டப்படுகிறது. காத்தான்குடி, கல்முனை, அக்கறைப்பற்று, பொத்துவில், சம்பாந்துறை போன்ற பகுதிகளை மையமாக கொண்டு குறித்த முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயுதங்களை களையுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதிலும் மிகவும் குறைந்தளவு ஆயுதங்களே பாதுகாப்பு தரப்பினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆயுதக்குழுக்களுக்கு கிழக்கைச் சேர்ந்த சிலஅரசியல் பிரமுகர்களின் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
0 Response to "கிழக்கில் முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றன -புலனாய்வு பிரிவினர்!"
แสดงความคิดเห็น