jkr

பிரபாகரன் கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டாரா? அவரை யாராவது கன்னத்தில் அறைந்தனரா?.. // வெள்ளைக்கொடியுடன் வந்த புலி உறுப்பினர்களை சுட்டுக் கொல்லவில்லை -58வதுபடையணியின் தலைவர் சவீந்திரசில்வா!


விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் வெள்ளைக் கொடியுடன் வந்தபோது அவர்களை சுட்டுக் கொன்றதாக வெளியான தகவலை தாம் செய்தித்தாள்களிலேயே வாசித்ததாக குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 58வது படையணியின் கட்டளைத்தளபதி சவீந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த செய்தியில் உண்மையில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர் இராணுவ அதிகாரி ஒருவரினால் இந்தக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்குமானால் அதற்கு தாம் வருந்துவதாக தெரிவித்துள்ளார். கடந்தவாரம் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்ததாக கூறப்பட்ட தகவலில் குறித்த அரசியல் துறையினரை சுட்டுக் கொல்லுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சவீந்திர சில்வாவுக்கே உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையிலேயே குறித்த செய்தியை சவீந்திர டி சில்வா மறுத்துள்ளார் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ எந்தவொரு பொதுமகனையும் சுட்டுக் கொல்லுமாறு தனக்கு கட்டளையிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்பலிகளின் தலைவர் பிரபாகரன் மரணமானமை குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகின்றமை குறித்து கருத்துரைத்துள்ள அவர் விடுதலைப்புலிகளின் ஏனைய உறுப்பினர்கள் கொல்லப்பட்டமையே போன்றே பிரபாகரனும் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் தமக்கு எதுவித முரண்பாடுகளும் தமக்கில்லை என அவர் தெரிவித்துள்ளார். தாம் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடப் போவதாக வெளியான தகவலையும் இதன்போது சவீந்திர சில்வா மறுத்துள்ளார்.
இதேவேளை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் சடலம் நந்திக்கடல் களப்பிலிருந்தே மீட்கப்பட்டதாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். போர் களத்தில் புலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்பட்டது இரகசியமானதல்ல. இதனால் பிரபாகரனின் முடிவு எப்படி இருந்தது? அவர் கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டாரா?, அவரை யாராவது கன்னத்தில் அறைந்தனரா?, அல்லது தலைப்பகுதி மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டத?, அவரது தலை கொழும்பில் இருக்கின்றதா? போன்ற கேள்விகளை என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் எண்ணுகிறேன். அரசாங்கமும், இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் பலனாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிடைத்தது. பாதுகாப்புச் செயலாளர் இராணுவத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தார். தமது படைப் பிரிவினர் புலிகளின் இலக்கு மீது தாக்குதல் நடத்துவதற்காக 203கிலோ மீற்றர்கள் பயணித்ததாகவும் சவீந்திர சில்வா கூறியுள்ளார். வன்னி இராணுவ நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தினர் எவ்வாறான கஸ்டங்களை எதிர்நோக்கினர் என்பதையும் சவேந்திர சில்வா இதன்போது விளக்கியுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பிரபாகரன் கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டாரா? அவரை யாராவது கன்னத்தில் அறைந்தனரா?.. // வெள்ளைக்கொடியுடன் வந்த புலி உறுப்பினர்களை சுட்டுக் கொல்லவில்லை -58வதுபடையணியின் தலைவர் சவீந்திரசில்வா!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates