jkr

வலிமேற்கு காரைநகர் பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு ராடார் தெறிகருவிகள் வழங்கப்பட்டன.

வலிகாமம் மேற்கு மற்றும் காரைநகர் பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு இன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் ராடார் தெறிகருவிகள் வழங்கப்பட்டன.

கட்டுமரத்தில் கடற்றொழில் செய்யும் வலிமேற்கு மற்றும் காரைநகர் பிரதேச கடற்றொழிலாளர்கள் தற்சயம் கடல்வலய தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட்ட நிலையிலும் ராடார் தெறிகருவிகள் இல்லாமையால் பாதுகாப்பற்ற நிலையில் கடற்றொழில் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதன்காரணமாக கடற்படை படகுகளினால் விபத்துக்குள்ளாகும் நிலை மட்டுமன்றி இயற்கை அனர்த்தங்களினால் கடற்றொழிலாளர்கள் காணாமற்போகும் போது அல்லது வழிதவறிபோகும் போது அவர்களை கண்டுபிடிப்பதும் சிரமமான காரியமாக இருந்தது.

இவ்விடயம் கட்றொழிலாளர்களினாலும் கடற்படையினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில் அவுஸ்திரேலிய அரசின் நிதியுதவியுடன் ஐ.ஓ.எம்.நிறுவனமானது ஒவ்வொன்றும் 3 ஆயிரத்து 750 ரூபா பெறுமதியுடைய மொத்தம் சுமார் பத்து லட்ச ரூபா மதிப்புமைய ராடார் தெறிகருவிளை அன்பளிப்பு செய்துள்ளது.
இன்றையதினம் பகல் பொன்னாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்படி கருவிகளை கடற்றொழிலாளர்களுக்கு வழங்கி வைத்தார். பொன்னாலை இறால் குளிரூட்டும் நிலைய வளாகத்தில் யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் தர்மலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விலேயே ராடார் தெறிகருவிகளை காரைநகர் மற்றும் வலிகாமம் மேற்கு கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலாளர் திருமதி பாபு காரைநகர் ஈபிடிபி பொறுப்பாளர் ரஜனி கடற்றொழிலாளர் சமாச மற்றும் பிரதேச கடற்றொழிலாளர் சங்கங்களின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்துகொண்டு ராடார் தெறிகருவிகளைப் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் கடற்றொழில் சமாச தலைவர் குலசிங்கம் மேற்படி கடற்றொழிலாளர்களின் நீண்டநான் தேவையான ராடார் தெறிகருவிகளைப் பெற்றுத்தந்தமைக்காக நன்றி தெரிவித்ததுடன் இதன்மூலம் கடற்படை படகுகளுடனான விபத்துக்கள் முற்றாக தடுக்கப்படுவதுடன் தொழில் செய்யும்போது வழிதவறிய மற்றும் காணாமற்போன கடற்றொழிலாளர்களையும் கண்டறியும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தமது நன்றியுரையில் மேலும் தெரிவித்தார்.




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "வலிமேற்கு காரைநகர் பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு ராடார் தெறிகருவிகள் வழங்கப்பட்டன."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates