முன்னாள் இராணுவத் தளபதி சிறில் ரணத்துங்க, ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆரவு.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்க முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சிறில் ரணதுங்க முன்வந்துள்ளார். மாவனல்ல பிரதேசத்தில் கேகாலை மாவட்ட, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் காசீம் தலைமையில் நேற்றுமுன்தினம் (22) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார மேடையில் பிரசன்னாகியிருந்த ஜெனரல் சிறில் ரணதுங்க தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.
ஜெனரல் பொன்சேகாவின் வெற்றியினை உறுதிப்படுத்தும் பொருட்டு அவர் நடவடிக்கைகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
0 Response to "முன்னாள் இராணுவத் தளபதி சிறில் ரணத்துங்க, ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆரவு."
แสดงความคิดเห็น