jkr
แสดงบทความที่มีป้ายกำกับ ஜனாதிபதி தேர்தலில் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ ஜனாதிபதி தேர்தலில் แสดงบทความทั้งหมด

மகிந்த ராஜபக்ச 12 வீத மேலதிக வாக்குகளால் அமோக வெற்றியீட்டுவார்!:புதிய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது!!

ஆர்.சிவகுருநாதன் (கொழும்பு)

Rajapaksha 101009திர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச 12 வீதமான மேலதிக வாக்குகளால் அமோக வெற்றியீட்டுவார் என புதிய கருத்து கணிப்பு ஒன்று தெரிவிக்கின்றது. பல்வேறு இந்திய அரசியல்வாதிகளுக்கு கடந்த காலங்களில் முக்கிய ஆலோசகர்களாக பணியாற்றியவர்களை உறுப்பினர்களை கொண்ட Viplav Communications Pvt Ltd என்ற நிறுவனம், ஜனவரி 6 – 13 வரை நாடு முழுவதும் 10,225 பேரிடம் மேற்கொண்ட ஒரு ஆய்விலேயே இந்த விபரம் தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த காலங்களில் இந்தியாவில் பல்வேறு கணிப்பீடுகளை வெற்றிகரமாக செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வின் படி, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய ஏழு மாகாணங்களிலும், மகிந்த ராஜபக்சவே முன்னிலை வகிப்பதாக தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக தென் மாகாணம், வட மேல் மாகாணம், சப்ரமுகா மாகாணம் என்பனவற்றில் மகிந்தவுக்கு அமோக ஆதரவு காணப்படுகிறது. முஸ்லீம்கள் மத்தியிலும் சரத் பொன்சேகாவை விட மகிந்தவுக்கு சற்று கூடுதலான ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. மலையக பகுதிகளிலும் மகிந்தவுக்கு கூடுதலான ஆதரவு உள்ளது. கிராமப்புறங்களிலும், பெண்கள் மற்றும் சிங்கள பௌத்தர்கள், சிங்கள கிறீஸ்தவர்கள் மத்தியிலும் மகிந்தவுக்கே கூடுதலான ஆதரவு உள்ளமை இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சரத் பொன்சேகாவை பொறுத்தவரை, வடக்கு – கிழக்கு மாகாணங்களிலும், கொழும்பிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் அவருக்கு கூடுதலான ஆதரவு உள்ளதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. தென்னிலங்கையை பொறுத்தவரை, நகரப்புறங்களிலேயே அவருக்கு ஓரளவு ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது.

சிறுபான்மை தேசிய இனமான தமிழர்களே, இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்களாக இருக்கப் போகிறார்கள் என சில அரசியல் அவதானிகளும், ஊடகங்களும் திரும்ப திரும்ப கூறி வரும் சூழலில், இந்த ஆய்வு பெரும்பான்மை சிங்கள மக்களே தேர்தலில் தீர்க்கமான சக்தியாக இருக்கப் போகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

அத்துடன், இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல், இலங்கையின் முற்போக்கான சிங்கள – முஸ்லீம் - மலையக தமிழ் மக்களின் பிரதான அரசியல் ஓட்டத்துக்கு எதிராக, எப்பொழுதும் பிற்போக்கு சக்திகளுடன் கைகோர்த்து வந்த தமிழ் தலைமைகள், இந்த தேர்தலிலும் அதே பழக்க தோசத்தால் பிற்போக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையிலான அணியுடன் கைகோர்த்து. மீண்டும் ஒருமுறை வடக்கு – கிழக்கு தமிழர்களை நட்டாற்றில் பரிதவிக்க விட இருப்பதும், இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சரத் பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம், சம்பந்தன் கோஷ்டி அடையப்போகும் கேவலமான முடிவு!


வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்காது விட்டது ஒரு தவறான முடிவு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (இதனை தமிழ் தேசியக் குட்டை என்ற சிறப்பான பெயரைக் கொண்டுதான் அழைக்க வேண்டும்.) பாராளுமன்ற குழுத் தலைவர் திருவாளர் இரா.சம்பந்தன் ‘திருவாய்’ மலர்ந்திருக்கிறார்.

முதலாவது விடயம், தமிழ் மக்கள் தாங்களாகவே அந்த தேர்தலில் இருந்து ஒதுங்கி இருக்கவில்லை என்பதை சம்பந்தன் கெட்டித்தனமாக மறைத்த விட்டமையாகும். புலிகள் மக்களை மிரட்டி அந்த தேர்தலில் வாக்களிக்கவிடாது தடுத்தனர் என்ற உண்மையை சொல்வதற்கு அவருக்கு மனம் வரவில்லை. புலிகளின் மிரட்டலை சம்பந்தனின் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நியாயப்படுத்தி அறிக்கை விட்டதை, தமிழ் மக்கள் மறந்துவிட்டிருப்பார்கள் என்ற நினைப்பில், எல்லோரது காதிலும் சம்பந்தன் பூ சுற்ற முற்பட்டிருக்கிறார்.

அடுத்தது, அந்த தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால், அவர்கள் இவ்வளவு துன்பங்களையும் அனுபவித்திருக்க வேண்டி வந்திருக்காது என்றும், சம்பந்தன் அங்கலாய்த்திருக்கிறார். அதன் அர்த்தம் என்னவென்றால், ‘கடந்த ஜனாதிபதி தேர்தலில், மகிந்த ராஜபக்ச ஒரு இலட்சத்திற்கு சற்று அதிகமான வாக்கு வித்தியாசத்திலேயே, ரணில் விக்கிரமசிங்கவை வென்றிருக்கிறார். தமிழ் மக்களை வாக்களிக்க விட்டிருந்தால், அவர்கள் ஐக்கிய தேசியக்கட்சிக்கே வாக்களித்திருப்பார்கள், ரணில் ஜனாதிபதியாகி இருப்பார், புலிகள் வடக்கு கிழக்கில் எவ்வித இடையூறமின்றி தமது ‘குருவிச்சை’ அரசாங்கத்தை கொண்டு நடாத்தியிருக்கலாம்’ என்பதாகும். பரம்பரை ஐக்கிய தேசியக்கட்சி விசுவாசிகளான தமிழ் தலைமைகளின் வாரிசான சம்பந்தன், இவ்வாறு கூறியிருப்பது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல தான்.

சம்பந்தனுக்கு இந்த காலம் கடந்த ஞானோதயங்கள் திடீரென வருவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று கோஷ்டிகளாக பிரிந்து நின்று குடுமிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றது. அதில் சம்பந்தன் – மாவை சேனாதிராஜா – சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரை கொண்ட கோஷ்டி, அதாவது கூட்டமைப்பின் வலதுசாரி பிற்போக்கு அணி, இராணுவ வெறியனும், இனவாதியுமான சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறது. பலமுறை கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டியும், சம்பந்தன் கோஷ்டியின் கருத்து வெற்றி பெறவில்லை. ஆனாலும் பலவந்தமாக தன்னும், சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக முடிவு எடுப்பது என்பதில் சம்பந்தன் கோஷ்டி விடாப்பிடியாக இருக்கின்றது.

சரத் பொன்சேகா இனவெறியன் என்பது ஒருபுறமிருக்க, இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்றாலும் சரி, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்றாலும் சரி, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் செய்ய முடியாது என்பதும், அந்த பெரும்பான்மையை எந்த ஒரு கட்சியாலும் தனித்து அடைய முடியாது என்பதும், சம்பந்தன் கோஷ்டிக்கு நன்கு தெரியும். அதை தெரிந்து கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றி, தமது சுய இலாபங்களை ஈட்டிக் கொள்ள நாடகம் ஆடுகின்றனர்.

இது தவிர, சரத் பொன்சேகா ஜனாதிபதியானதும், அதிகாரம் முழுவதையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ரணில் வலியுறுத்தி வருகின்றார். அதுவும் நடக்கப் போவதில்லை. ஜே.வி.பியின் தயவில் சரத் பொன்சேகா ஜனாதிபதியாக வந்தால், அவர் இனப் பிரச்சினைக்கும் ஒருபோதும் தீர்வு காணப் போவதில்லை. விடயங்கள் இப்படியிருக்க, யாரை முட்டாள்களாக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் நாடகமாடுகிறார்களோ தெரியவில்லை.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், காலத்துக்கு காலம், ஜீ.ஜீ.பொன்னம்பலம் முதல் பிரபாகரன் வரை, தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்து வந்துள்ளனர். அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல சம்பந்தன் கோஷ்டி சரத் பொன்சேகாவுக்கு வழங்கும் ஆதரவு அமையப் போகின்றது. அதே வேளையில், சம்பந்தன் கோஷ்டியினர் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப் போகும் நடவடிக்கையால், பிரபாகரன் அடைந்த கேவலமான முடிவை விட, மிக மிக கேவலமானதும், அருவருக்கத்தக்கதுமான ஒரு முடிவை சம்பந்தன் கோஷ்டியினர் அடைய உள்ளனர் என்பதும் மறுக்க முடியாத ஒர் உண்மையாகும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

போரினால் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உதவித்தேர்தல் ஆணையாளர் வடக்கு விஜயம்


போரினால் இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து ஆராய்வதற்காக உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ்.சிறிவர்தன திங்களன்று வவுனியா மற்றும் யாழ் மாவட்டங்களுக்கு விஜயம் செய்து நிலைமைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

உதவித் தேர்தல் ஆணையாளருடன் இடம்பெயர்ந்த வாக்காளர்களின் வாக்களிப்பு ஏற்பாடுகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.சண்முகமும் வடபகுதிக்கு விஜயம் செய்துள்ளார்.

வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ.எஸ்.கருணாநிதியைச் சந்தித்து இடம்பபெயர்ந்த வாக்காளர்களுக்கான வசதிகள் குறித்து பேசியதுடன், இடம்பெயர்ந்த வாக்காளர்களின் விண்ணப்பங்கள் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் உதவித் தேர்தல் ஆணையாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, யாழ் அரச அதிபர் மற்றும் யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்களில் 22 ஆயிரம் பேரளவில் மாத்திரமே தாங்கள் இடம்பெயர்ந்துள்ள பகுதிகளில் தமக்கு வாக்களிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனக்கோரி விண்ணப்பித்துள்ளதாகத் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இடம்பெயர்ந்த வாக்காளர்கள் விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி கடந்த வியாழக்கிழமையுடன் முடிவடைந்துள்ளதையடுத்து பெரும் எண்ணிக்கையிலான இடம்பெயர்ந்த வாக்காளர்கள் வடபகுதியில் வாக்களிக்க முடியாமல் போகக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்களின் வாக்களிப்பு வசதிகள் குறித்து எந்த ஓர் அரசியல் கட்சியும் இதுவரையில் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை என்றும் இந்தக் குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

முன்னாள் இராணுவத் தளபதி சிறில் ரணத்துங்க, ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆரவு.


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்க முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சிறில் ரணதுங்க முன்வந்துள்ளார். மாவனல்ல பிரதேசத்தில் கேகாலை மாவட்ட, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் காசீம் தலைமையில் நேற்றுமுன்தினம் (22) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார மேடையில் பிரசன்னாகியிருந்த ஜெனரல் சிறில் ரணதுங்க தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.

ஜெனரல் பொன்சேகாவின் வெற்றியினை உறுதிப்படுத்தும் பொருட்டு அவர் நடவடிக்கைகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates