மெராக் அகதிகள் கப்பலில் ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் இந்தோனேஷிய கடற்படையினரால் நடுக்கடலில்வைத்து பிடிக்கப்பட்டு இந்தோனேஷிய கடலில் தடுத்துக்கு வைக்கப்பட்டுள்ள மெராக் கப்பலில் உள்ள ஈழத்தமிழர் ஒருவர் நேற்று புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக இரத்தவாந்தி எடுத்த இவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கு இந்தோனேஷிய அதிகாரிகள் மறுத்ததை அடுத்து 29 வயதுடைய இவர் நேற்று இரவு உயிரிழந்தார் என்று கப்பலிலுள்ள மக்களின் பேச்சாளர் அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் இந்தோனேஷிய கடற்படையினரால் 255 ஈழத்தமிழர்களுடன் பிடிக்கப்பட்ட இந்த கப்பல் 11 வாரங்களாக இந்தோனேஷிய கடலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளது. தம்மை ஆஸ்திரேலியாவுக்கோ வேறு நாட்டுக்கோ அனுப்பிவைப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிமொழி தரும்வரை, தாம் கப்பலிலிருந்து இறங்குப்போவதில்லை என்று கப்பலில் உள்ள மக்கள் போராட்டம் மேற்கொண்டுவருகின்றனர்.
நேற்று இரவு இடம்பெற்றுள்ள இந்த உயிரிழப்பு தடுத்திருக்க கூடிய ஒன்று. ஆனால், மிகவும் கவலைக்குரிய விடயமாக இன்று எமது காதுகளில் இந்த செய்தி வந்து விழுந்திருக்கிறது. இனியாவது ஆஸ்திரேலிய அரச அந்த மக்களை ஆஸ்திரேலியவுக்குள் அனுமதிப்பதற்கு இணங்கவேண்டும் என்றும் ஆஸ்திரேலிய அகதிகள் சபை தெரிவித்துள்ளது.
0 Response to "மெராக் அகதிகள் கப்பலில் ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழப்பு!"
แสดงความคิดเห็น