ஆசிரியர் மகேஸ்வரனின் சமுத்திரத்தின் முத்துக்கள் ஆங்கில கவிதை நூல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
.jpg)
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துகொண்டு கவிதை நூலை வெளியிட்டு வைத்தார். இந்நிகழ்வில் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நல்லை ஆதீனம் சிறீலசிறி சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் யாழ். குருமுதல்வர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அடிகளார் யாழ். மாவட்ட நீதிபதி பீ.வசந்தசேனன் யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பேரசிரியர் என். சண்முகலிங்கன் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக பங்குகொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆசிரியர் மகேஸ்வரனின் முயற்சியை வெகுவாக பாராட்டியதோடு எதிர்வரும் காலத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக மேலும் பல நூல்களை அவர் உருவாக்கி வெளியிட வேண்டுமென கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 Response to "ஆசிரியர் மகேஸ்வரனின் சமுத்திரத்தின் முத்துக்கள் ஆங்கில கவிதை நூல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டது."
แสดงความคิดเห็น