jkr

வடபகுதி ஏற்றுமதி நடவடிக்கைகளை முன்கொண்டுசெல்லும் முகமாக அமைச்சர் பீரிஸ் யாழ்ப்பாணம் விஜயம்.

வடபகுதி உற்பத்திப் பொருட்களை சர்வதேச ரீதியில் ஏற்றுமதிக்கு தயார் செய்யும் நோக்குடன் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இன்று காலை விமானம் மூலம் பலாலி வந்தடைந்த அமைச்சர் பீரிஸ் அவர்களை சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பலாலி விமான நிலையத்தில் வரவேற்றார். இச்சமயம் யாழ். படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மார்க் அவர்களும் உடனிருந்தார். இதனைத்தொடர்ந்து பலாலி படைத்தலைமையக கேட்போர் கூடத்தில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருடன் மேஜர் ஜெனரல் மார்க் அவர்களும் இச்சந்திப்பில் பங்குகொண்டனர். தற்சமயம் விவசாயம் மற்றும் பழச்செய்கை ஆகியன மேற்கொள்ளப்படும் இடங்கள் புதிதாக விடுவிக்கப்படவுள்ள உயர் பாதுகாப்பு வலய பிரதேசங்கள் உற்பத்தி விளை பொருட்களை களஞ்சியப்படுத்தக் கூடிய பொருத்தமான இடங்கள் என்பன குறித்து இச்சந்திப்பின் போது விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "வடபகுதி ஏற்றுமதி நடவடிக்கைகளை முன்கொண்டுசெல்லும் முகமாக அமைச்சர் பீரிஸ் யாழ்ப்பாணம் விஜயம்."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates