மீண்டும் அரசியல் களத்தில் குதிக்கிறார் சந்திரிகா, மகனையும் அறிமுகம்!
அடுத்த மாதம் 8 ஆம் திகதி - தனது தகப்பனார் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் பிறந்த நாளன்று - மீண்டும் அரசியலில் பிரவேசிக்கிறார் சந்திரிகா குமாரதுங்க.
அன்றையதினம் அத்தலங்கவில் உள்ள தனது இல்லத்தில், சிறிலங்கா சுதந்திர கட்சியிலிருந்து மகிந்த ராஜபக்சவினால் ஓரங்கட்டப்பட்ட கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்களை சந்திக்கவுள்ள சந்திரிகா குமாரதுங்க, எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவதன் ஊடாக தனது அரசியல் வாழ்வை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய சந்திப்பில் தனது மகன் விமுக்தியையும் தனது முன்னாள் அரசியல் சகாக்களுக்கு அவர் அறிமுகம் செய்துவைப்பார் என்று தெரியவருகிறது.
சில நாட்களுக்கு முன்னர் மகரகம புற்றுறோய் வைத்தியசாலைக்கு மருந்து வகைகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையில் -
இந்த நாட்டை நல்லவர்களின் கைகளில் ஒப்படைப்பதற்கு மேற்கொள்ளப்படும் எந்த முயற்சிக்கும் நான் உதவிபுரிவேன். நான் அரசியலில் இருந்தோ எனது கட்சியிலிருந்தோ விலகியவள் அல்ல. விலக்கப்பட்டவள். இந்ந நாடு தற்போது எப்பேற்பட்ட ஊழலில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விடயம். அதிலிருந்து தாய்நாட்டை மீட்டெடுப்பதற்கு முன்னிற்கும் எவருக்கும் நான் பக்கபலமாக நின்று உழைப்பேன் - என்று கூறியிருந்தார்.
0 Response to "மீண்டும் அரசியல் களத்தில் குதிக்கிறார் சந்திரிகா, மகனையும் அறிமுகம்!"
แสดงความคิดเห็น