செட்டிகுளம் இடம்பெயர் முகாமில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு: 6 பேர் படுகாயம்
வவுனியா, செட்டிகுளம் இடம்பெயர் முகாமில் இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 சிறுவர்கள், 2 பெண்கள் அடங்கலாக 6 அப்பாவி தமிழர்கள் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தினால் அந்த முகாமில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த குறித்த 6 பேரும் முகாமிலிருந்து காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்ற போதே இராணுவத்தினர் சுற்றிவளைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக தகவல் கிடைக்கப்பெற்றதும் இணைக்கப்படும்.
0 Response to "செட்டிகுளம் இடம்பெயர் முகாமில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு: 6 பேர் படுகாயம்"
แสดงความคิดเห็น