ரோஹித போகல்லாகம -எஸ்.எம். கிருஷ்ணா நியூயோர்க்கில் சந்திப்பு
நியூயோர்க்கில் நடக்கும் சர்வதேச காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகமவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையில் வடக்கு பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட சுமார் 2,80,000 தமிழ் மக்களை முகாம்களிலிருந்து அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவது குறித்து எஸ்.எம்.கிருஷ்ணா அமைச்சர் ரோகிதவுடன் ஆலோசித்துள்ளார்.
போர் நடைபெற்ற பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றும் பணி துரிதமாக இடம்பெற்று வருவதாகவும், ஒரு சில பகுதிகளில் மக்கள் குடியமர்த்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரோஹித போகல்லகம தம்மிடம் தெரிவித்ததாக அமைச்சர் கிருஷ்ணா கூறியதாக பி.டி.ஐ. இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழர்களுக்கு அதிகார பங்கீடு வழங்குவது குறித்து ரோஹித போகல்லகம கருத்து எதுவும் வெளியிடவில்லை என எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்ததாகவும் பி.ரி.ஐ. இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

0 Response to "ரோஹித போகல்லாகம -எஸ்.எம். கிருஷ்ணா நியூயோர்க்கில் சந்திப்பு"
แสดงความคิดเห็น