அமெரிக்காவுக்கு மக்களை சட்ட விரோதமாக கொண்டுசென்ற இலங்கையருக்கு சிறை
சிம்சன் வளைகுடா ஊடாக அமெரிக்க வேர்ஜின் தீவுகளுக்கு மக்களை சட்ட விரோதமாகக் கூட்டி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கு டச்சு நீதிமன்றம் திங்கட்கிழமை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதில் ஒருவர் இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது. வேறொரு இலங்கையர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்ட நால்வருக்கும் 6 மாதம் தொடங்கி 30 மாத்ங்கள் வரையான சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது,
மக்களைக் கடத்துவதற்குப் பயன்பட்ட அஜடா என்ற படகு கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி கடற்பாறையில் மோதியபோது பிரிட்டன் வேர்ஜின் தீவுகளில் கைப்பற்றப்பட்டது. அந்த வழியால் சென்றா மீன்வப் படகின் உதவியுடன் 13 பேர் காப்பாற்றப்பட்டனர். இன்றுவரை 5 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 3 சிறுவர்களைக் காணவில்லை.
வழக்கை விசாரித்த நீதிபதி, முக்கிய சந்தேக நபரான சிறிபாஸ்கரன் சிவநாதனுக்கு (45) 3 வருட சிறைத் தண்டனை வழங்கியுள்ளார். தாம் மக்களுக்கு உதவிசெய்யவே அவ்வாறு செய்தது என்றும் தமது கட்டணம் நபர் ஒருவருக்கு 32,000 அமெரிக்க டொலர்கள் என்றும் சிவநாதன் கூறினார். கட்டணம் வசூலித்ததில் இருந்து அவர் மனிதாபிமான முறையில் செயல்படாமல் லாப நோக்கில் செயல்பட்டுள்ளதாக நீதிமன்று கூறியது
குணநாயகம் துரைநாயகம் (35) என்பவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். அவர் தமது சகோதரர் ஒருவரை இலங்கையில் இருந்து கனடா நாட்டுக்கு கூட்டிவருவதற்காக 40,000 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளார். எனவே அவர் லாப நோக்கில் செயற்படவில்லை என விடுவிக்கப்பட்டார். ஆனால் அவரையும் 30 மாதங்களுக்கு தடுத்து வைக்க வேண்டும் என அரச வக்கீல் வாதாடியமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தவிர குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு 34 மாதங்கள், 54 மாதங்கள், மற்றும் 24 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டன. இந்தத் தீர்ப்புகள் அவர்கள் ஆதாயம் தேடும் நோக்கோடு செயற்பட்டதால் வழங்கப்பட்டன.

0 Response to "அமெரிக்காவுக்கு மக்களை சட்ட விரோதமாக கொண்டுசென்ற இலங்கையருக்கு சிறை"
แสดงความคิดเห็น