jkr

ஈழத்தமிழர்கள் இரத்தக் கண்ணீர் வடிப்பதற்கு இந்திய அரசும் ஒரு காரணம்: வைகோ

ஈழத் தமிழர்கள் இரத்தக் கண்ணீர் வடிப்பதற்கும், அவர்கள் சிறுக சிறுக மடிவதற்கும் இந்திய அரசும் ஒரு காரணம் எ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ கு‌ற்ற‌ம் சா‌ற்‌றியு‌ள்ளா‌ர். செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இலங்கை முகாம்களில் தமிழர்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். இந்த கொடுமைகளை மக்களிடம் எடுத்து சொல்ல இந்திய அரசு அனுமதிப்பதில்லை.
ஈழத் தமிழர்கள் இரத்தக் கண்ணீர் வடிப்பதற்கும், அவர்கள் சிறுக சிறுக மடிவதற்கும் இந்திய அரசும் ஒரு காரணம். போரை நடத்தியதே இந்திய அரசு, ஆயுதங்கள் கொடுத்தது இந்திய அரசு. இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது தடுக்கப்படவில்லை. நாங்கள் இனி ஈழ‌த் தமிழர்களை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று ராகுல்காந்தி கூறியிருப்பது, அவருக்கு வரலாறு தெரியவில்லை அல்லது தமிழர்களை முட்டாளாக்கப் பார்க்கிறார் என்று தான் அர்த்தம். அப்படி எல்லாம் கூறி தமிழர்களை ஏமாற்றிவிட முடியாது என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஈழத்தமிழர்கள் இரத்தக் கண்ணீர் வடிப்பதற்கு இந்திய அரசும் ஒரு காரணம்: வைகோ"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates