நான் வலைப்பூ என்னும் கடலில் முழ்கி எடுத்த முத்துக்கள்
நெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு

கொட்டாஞ்சேனைக் கோவிலிலே
வசந்த மண்டப வாசலிலே
பக்தியோடு நின்றேனே
பாவை ஒருத்தி வந்தாளே
ஓரக் கண்ணால் பார்த்தாளே
என்னை இழந்தேனே – நான்
காதலில் விழுந்தேனே.
சோதனைச் சாவடி யொன்றிலே
கால்கடுக்க நின்றேனே
பின்னால் வந்து நின்றாளே
உரசி உரசி அசைந்தாளே
ஒத்தடங்கள் தந்தாளே
எப்படிச் சொல்வேனோ-சுகம்
என்ன வென்பேனொ
யாழ் செல்லும் விமானத்திலே
அருகில் வந்து அமர்ந்தாளே
அறிமுகமாய் ஆனோமே
ஒரு முகமாய் போனோமே
எப்படி மறப்பேனோ – அதை
என்றும் மறவேனே.
வெள்ளவத்தைக் கடலருகே
தாழை மர நிழலடியே
கொஞ்சிக் குலவி மகிழ்ந்தோமே
எம்மை மறந்து இருந்தோமே
சுகம் பல கண்டோமே
சுவை பல கொண்டோமே
பம்பலப்பிட்டி சந்தியிலே
பஸ் தரிப்பின் பின்னாலே
காத்து காத்து நின்றேனே
கன்னியங்கு வந்தாளே
கையில் ஒரு கவருடனே - தன்
கல்யாண அழைப்பிதழ் என்றாளே – என்
நெஞ்சில் வெடித்த குண்டு கிளமோரே!
அடி இது முறையோ அடி இது தகுமோ
0 Response to "நான் வலைப்பூ என்னும் கடலில் முழ்கி எடுத்த முத்துக்கள்"
แสดงความคิดเห็น