இபேவிலும் சச்சின் சாதனை

சச்சின் என்றாலே சாதனை தானே.கிரிக்கெட் உலகில் சாதனை மேல் சாதனைகள் நிகழ்த்திய சச்சின் இப்போது இபே ஏலத்திலும் சாதனை படைத்துள்ளார்.
அவரது கிரிக்கெட் முகாமிற்கான வாய்ப்பு ரூ 12 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.இபே இந்திய வராலாற்றிலேயே அதிக ஏல தொகை இது தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இபே புகழ்பெற்ற ஏல தளம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.இபே இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது.இபேவை அடியொட்டி இந்தியாவில் துவங்கப்பட்ட ஏல தளமான பாஸி டாட் காம் தளத்தை கையகப்படுத்திக்கொண்டதன் மூலமாக இபே இந்தியாவில் அடியெடுத்து வைத்தது.
இபேவுக்கென்று ஒரு காலாச்சாரம் இருக்கிறது.இபேவை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்துபவர்கள் எல்லாம் இருக்கின்றனர்.ஆனால் இந்தியாவில் அத்தகைய நிலை இல்லை.மேலும் இபே இங்கு ஏல தளமாக அல்லாமல் குறைந்த அல்லது ஒரே விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் தளமாகவே பார்க்கப்படுகிறது.
அதே போல இபேவில் நடக்கும் ஏலங்கள் பெரும்பாலும் திரைப்படத்துறை சார்ந்த்தாக இருக்கிறது.குறைந்தபட்சம் மெரிய அளவிலான ஏலங்கள் நடிகர்களின் டவல் போன்றவற்றை எஆலம் எடுத்ததாகவே இருக்கிறது.இந்த வரிசையில் தற்போது கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் பயிற்சி முகாமிற்கான ஏலம் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றுக்காக இந்த ஏலம் விடப்பட்டது. சச்சினோடு தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை இந்த ஏலம் வழங்குகிறது.
மும்பையை சேர்ந்த தனிநபர் ஒருவரும் விர்ல்பூல் நிறுவனமும் இந்த ஏலத்தில் வெற்றி பெற்றுள்ளன.ரூ12 லட்சம் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது,இபே இந்திய வராலாற்றில் அதிக பட்ச தொகை இதுவாம்.
0 Response to "இபேவிலும் சச்சின் சாதனை"
แสดงความคิดเห็น