சதாசிவம் கனகரட்னத்தின் புதல்வர் விடுதலைப் புலி உறுப்பினர் என்கிறது லக்பிம

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னத்தின் புதல்வர் ஒர் சிரேஸ்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் என புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர் என லக்பிம ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.பல்வேறு தற்கொலைத் தாக்குதலுடன் குறித்த நபருக்கு நேரடித் தொடர்பு காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர் எனவும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் உள்ளிட்டோரின் தாக்குதல்களுடன் தொடர்புடைய கிரி என்ற நபர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரின் புதல்வர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்~ மேலும் பல முக்கிய அரசாங்க அதிகாரிகளை படுகொலை செய்வதற்கு கிரி சூழ்ச்சித் திட்டம் தீட்டியதாகவும் கிரி என்ற விடுதலைப் புலி உறுப்பினருக்கு ஆதரவாக செயற்பட்ட இராணுவ உயரதிகாரிகளிடம் நடத்திய விசாரணைகளின் மூலம் பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன எனவும் லக்பிம ஆங்கில வார இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தந்தையான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து கொண்டு தாக்குதல் திட்டங்களை தீட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றின் முக்கியஸ்தர் ஒருவருக்குச் சொந்தமான அத்துருகிரிய வீடொன்றிலும் கிரி தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது எனவும் லக்பிம ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
0 Response to "சதாசிவம் கனகரட்னத்தின் புதல்வர் விடுதலைப் புலி உறுப்பினர் என்கிறது லக்பிம"
แสดงความคิดเห็น