இங்குள்ளவர்கள் நினப்பதுபோல அங்கு நிலமை மோசமாக இல்லை" - தமிழக குழு

ஐந்து நாள் பயணமாக இலங்கை சென்றிருந்த இந்தியாவின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்தியா திரும்பியுள்ள போதும் திருமாவளவன் உட்பட தி.மு.க நா.உ களும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துள்ளனர். ஆனால் காங்கிரசின் கே.எஸ். அழகிரி "இங்குள்ளவர்கள் கூறுவது போல அங்குள்ள முகாம்கள் மோசமாக இல்லை. ஆனால் தம்மை சொந்த இடங்களுக்கு அனுப்பச் சொல்லியே மக்கள் வற்புறுத்துகிறார்கள. மற்றுமப்டி ஒரு குறையும் இல்லை" என்று கூறியுள்ளார்.
திருமாவளவனைப் பார்த்து மகிந்த நக்கலடித்தது குறித்து கேள்வியெழுப்பிய பத்திரிகையாளர்களுக்கு, திருமாவளவன் "அது சும்மா ஜோக்" என்று பதிலளித்ததாகவும் தெரிய வந்துள்ளது. ஆனால் முகாம் பற்றி தாம் கூறுவதற்கு எதுவும் இல்லை என்றும் அதுகுறித்து கலைஞர் கூறுவார் என்றும் திருமாவளவன் சொல்லிவிட்டு நகர்ந்து சென்றாராம்.
இந்தியாவில் கூட்டங்கள், கருத்தரங்குகள், ஊர்வலங்கள் என்று எங்கும் முழங்கும் திருமாவளவன் இப்போது பெட்டிப்பாம்பாக இருப்பது ஏன்? இங்கு தொண்டை கிழியக் கதறுபவர் அங்கு நேரில் சென்று ஒன்றுமே கேட்கவில்லை. இதைவிட அவர் இலங்கை செல்லாது இருந்திருந்தால் இன்னும் கொஞ்ச நாளுக்கு ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்திருக்கலாம்.
0 Response to "இங்குள்ளவர்கள் நினப்பதுபோல அங்கு நிலமை மோசமாக இல்லை" - தமிழக குழு"
แสดงความคิดเห็น