jkr

ஈழத்தமிழர்களை மீட்க கோரி தமிழகம் முழுவதும் மூன்று விழிப்புணர்வு பிரசார பயணம் - பழ. நெடுமாறன் அறிவிப்பு


இலங்கையில் ராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள முள்வேலி முகாம்களில் இருந்து ஈழத்தமிழர்களை மீட்க கோரி தமிழகம் முழுவதும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வருகிற ஓக்டோபர் மாதம் 27, 28, 29ஆகிய திகதிகளில் விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொள்ளப்படும் என்றும், பயணத்தின் முடிவில் திருச்சியில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. பழ நெடுமாறன் அறிவித்துள்ளார்.

இலங்கையில் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு மனித உரிமை மீறலை சந்தித்து வரும் அப்பாவி ஈழத்தமிழர்களை விடுவிக்ககோரி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நேற்று மாலை மயிலாப்பூர் மாங்கொல்லையில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கதிற்கு பா. ம. க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு தலைமை தாங்கினார்.

கருத்தரங்கில் மனி உரிமை மீறலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் சர்வதேச பெண்மணியான அமெரிக்காவை சார்ந்த எலைன் சான்டர் என்பரின் உரை திரையில் காண்பிக்கப்பட்டது. பின்னர் பேசிய பழ. நெடுமாறன், முள்வேலி முகாம்களில் வதைபடும் ஈழத்தமிழர்களை மீட்க, வருகிற ஓக்டோபர் மாதம் 27, 28, 29 ஆகிய மூன்று திகதிகளில் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொள்ளப்படும்.

என்றும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் தா. பாண்டியன் தலைமையிலாள குழுவினர் கன்னியாகுமரியிலிருந்தும், ம. தி. மு. க பொதுசெயலாளர் வைகோ தலைமையிலான குழுவினர் இராமேசுவரத்திலிருந்தும், பா. ம. க. நிறுகூனர் மருத்துவர் ராமதாசு தலைமையிலான குழுவினர் சென்னையிருந்தும், எம்முடைய தலைமையிலான குழுவினர் உதகமண்டலத்திலருந்தும் புறப்பட்டு 29 ஆம் திகதியன்று திருச்சியில் ஒன்று கூடுகிறோம்.

அன்றிரவு திருச்சியில் பிரமாண்டமான பொதுகூட்டத்தை நடத்தவும் தீர்மானித்துள்ளோம். இலங்கைக்கு சென்றிருக்கிற தமிழக எம்.பி.களின் குழுவினர் என்ன அறிக்கையினை வெளியிடுவார்கள் என்பது எல்லோரும் அறிந்ததோம். பி. களின் பயணம் குறித்து எதிர்கட்சிகள் கண்டன குரல் எழுப்பியவுடன், அவர்கள் அனைவரும் தங்கள் கட்சியின் செலவில் தான் சென்றுள்ளனர் என்று கூறியிருக்கிறார்.

கலைஞர் தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகிறார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். ஈழத்தமிழர்களின் பிரச்சினை, இன்று உலக தமிழர்களின் கைகளுக்கு சென்றுவிட்டது.

அதனால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். என்றார். இந்த கருத்தரங்கில் வைகோ, ராமதாசு, கோ.க மணி, சி. மகேந்திரன், செல்வகுமார், மனோஜ்குமார், துரையரசன் உள்ளிட்ட ஏராளமான இன உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஈழத்தமிழர்களை மீட்க கோரி தமிழகம் முழுவதும் மூன்று விழிப்புணர்வு பிரசார பயணம் - பழ. நெடுமாறன் அறிவிப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates