மட்டக்களப்பு நகரில் மத்திய பஸ் நிலையம் அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார்

30 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த மட்டக்களப்பு மத்திய பஸ் நிலையம் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமையினால் எந் நேரமும் இடிந்து விழக் கூடிய நிலையில் காணப்படுகின்றது.
அஇலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலை எதிர் நோக்கும் நிதி நெருக்கடி காரணமாக நீண்ட காலமாக புனரமைக்கப்படவுமில்லை.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் "நெக்கோட் " திட்டத்தின் கீழ் கடைத் தொகுதிகள் உட்பட சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக மத்திய பஸ் நிலையத்தை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார்.
அண்மையில் "நெக்கோட் " திட்டத்தின் மாவட்ட பணிப்பாளர் எஸ்.சாமித்தம்பி சகிதம் பஸ் நிலையத்திற்கு அதற்கான வரைபடத்துடன் விஜயம் செய்த முதலமைச்சர் புதிய பஸ் நிலையக் கட்டிடத் தொகுதியின் அமைவிடங்களையும் பார்வையிட்டார்.
0 Response to "மட்டக்களப்பு நகரில் மத்திய பஸ் நிலையம் அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார்"
แสดงความคิดเห็น