இந்தியா-ஆஸ்ட்ரேலியா தொடர் நாளை துவக்கம்: பாதுகாப்பு தீவிரம்

இந்தியா-ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை துவங்குவதை முன்னிட்டு, வதோதரா ரிலையன்ஸ் மைதானத்தில் 2,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பை மேம்படுத்த இந்திய, ஆஸ்ட்ரேலிய அணி வீரர்கள் தங்கியுள்ள விடுதி மற்றும் மைதானத்தில் ரகசிய கண்காணிப்புப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக வதோதரா நகர காவல்துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007இல் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மோசமாக விளையாடியதால் அதிருப்தியடைந்த வதோதரா ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களை மைதானத்தில் வீசி வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தினர். அதுபோன்றதொரு சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
பிந்திக் கிடைத்த செய்தி நாளைய போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திரசிங் தோனி விளையாடமாட்டார் என நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றது
0 Response to "இந்தியா-ஆஸ்ட்ரேலியா தொடர் நாளை துவக்கம்: பாதுகாப்பு தீவிரம்"
แสดงความคิดเห็น