ரி.ஆர்.பாலு தலைமையிலான இந்திய நாடாளுமன்றக்குழுவினர் நாடு திரும்பினர்!

இலங்கை வந்திருந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் ரி.ஆர்.பாலு மற்றும் தமிழக முதல்வரின் மகள் கனிமொழி எம்.பி உள்ளிட்ட குழுவினர் இன்றுகாலை 4.10அளவில் சென்னையைச் சென்றடைந்துள்ளனர். இந்தக் குழுவினர் இன்றுபிற்பகல் 3மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிரு புறப்பட்டுச் சென்றிருந்தனர். கடந்த 10ம்திகதி இங்கு வந்திருந்த தமிழக் எம்.பிக்கள் குழு புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) கட்சிகளுடனும், தமிழ்க்கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர். பின்னர் யாழ்ப்பாணம் சென்று யாழ்ப்பாணத்திற்குச் சென்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினருக்கு துரையப்பா விளையாட்டரங்கில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. சமூகசேவைகள் அமைச்சரும் ஈபிடிபி செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் யாழ். மக்களினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மற்றும் யாழ். மத்திய கல்லூரி பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்ட குழுவினர் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு குழுவினர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் வவுனியா நலன்புரி நிலையங்களுக்கும் விஜயம் செய்து நேற்று முன்தினம் மலையகத்திற்கும் சென்றிருந்தனர். நேற்றையதினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரதமர், பாதுகாப்பச் செயலர், மீள்குடியேற்ற அமைச்சர், முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஆகியோருடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தனர். இன்றையதினம் வெளிவிவகார அமைச்சரையும் எதிர்க்கட்சியினரையும் இக்குழுவினர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
0 Response to "ரி.ஆர்.பாலு தலைமையிலான இந்திய நாடாளுமன்றக்குழுவினர் நாடு திரும்பினர்!"
แสดงความคิดเห็น