வவுனியா பூந்தோட்டத்தில் துப்பாக்கிச் சண்டை

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது:
சிறிநகர் பகுதியில் நடமாடிய மூன்று சந்தேக நபர்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சுற்றி வளைத்துள்ளனர். அப்போது அந்நபர்களில் ஒருவர் பிஸ்டலை எடுத்ததாகவும் அடுத்தவர் கிரனைட்டை எடுத்து வீசிவிட்டு தப்ப முனைந்ததாகவும் வவுனியா போலீஸ் கூறுகிறது.
இதையடுத்து வவுனியா போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு வர சந்தேக நபர்கள் மூவரும் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஒரு நபர் போலீசாரை நோக்கிச் சுட்டதாகவும், திருப்பி தாம் சுட்டதில் அவர் கொல்லப்பட்டதாகவும் கூறும் போலீஸ் அடுத்த நபர் கிரனைட் வீசியபோதும் அது வெடிக்கவில்லை என்றும் கூறுகிறது.
அந்நபரைத் தாம் பின்னர் கைது செய்துவிட்டதாகவும், எனினும் மூன்றாம் நபர் தப்பி ஓடிவிட்டதாகவும் போலீஸ் மேலும் கூறியுள்ளது. கைது செய்யப்பட்டவர் புலி உறுப்பினரா என விசாரணைகள் தொடர்கின்றனவாம்.
0 Response to "வவுனியா பூந்தோட்டத்தில் துப்பாக்கிச் சண்டை"
แสดงความคิดเห็น