கிழ. பல்கலைக்கழக சிங்கள மாணவர்களின் இடமாற்றத்திற்கு எதிராக அகிம்சை வழி போராட்டம்;மாணவர் ஒன்றியம் அறிவிப்பு

இது தொடர்பாக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் " கிழக்கில் இன்னமும் பயங்கரவாதமா? அப்படி இல்லை என்றால் சிங்கள மாணவர்கள் இட மாற்றம் எதற்கு?" என வினா எழுப்பியுள்ளது.மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.யோகேஸ்வரன் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
" எமது நாட்டில் கடந்த காலங்களில் இன ரீதியான வன்முறைகள் இடம்பெற்ற போதும் தமிழ் ,சிங்கள ,முஸ்லிம் மாணவர்களிடையே எவ்வித முரண்பாடுகளும் இது வரை ஏற்பட்டத்தில்லை.எனினும் கடந்த ஆண்டு இடம்பெற்ற சிங்கள மாணவனின் படுகொலையானது தமிழ் ,சிங்கள மாணவர்கள் உறவை சீர் குலைத்தது என்பதால் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
குறித்த படுகொலையினால் எமது பல்கலைக்கழத்திற்கு அனுமதிக்கப்பட்ட சிங்கள மாணவர்கள் வேறு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிகமாக இடமாற்றப்பட்டனர்.
இதற்கு நாட்டின் அன்றைய சூழ்நிலையே காரணமாகும் .இதன் காரணமாகவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி பல்கலைக்கழக வளாகத்தில் அன்று தொடக்கம் இன்று வரை பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது நாட்டில் யுத்தமற்ற ஒரு சுமூகமான சமாதான சூழல் நிலவுகின்ற வேளையில் சிங்கள மாணவர்கள் எமது பல்கலைக்கழகத்தில் மீண்டும் அனுமதி பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.ஆனால் சிங்கள மாணவர்களை தனியாகப் பிரித்து புத்தள என்னுமிடத்தில் விரிவுரைகளை ஆரம்பிப்பது என பல்லைக்கழக மானிய ஆணைக்குழு எடுத்துள்ள முடிவு கவலைக்குரியது."
என தெரிவிக்கப்பட்டுள்ள இது தொடர்பான அறிக்கையில் பல்கலைக்கழ மானிய ஆணைக்குழுவின் இந்த தீர்மானத்தை கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இது தொடர்பாக ஜனாதிபதி ,பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழு ,உயர் கல்வி அமைச்சர் உட்பட பல்வேறு தரப்பினருக்கு மாணவர் ஒன்றியம் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
எதிர்வரும் திங்கள் கிழமைக்கு முன்னதாக சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில் அகிம்சை வழியில் போராட்டம் முன்னெடுக்கப்படும்." என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "கிழ. பல்கலைக்கழக சிங்கள மாணவர்களின் இடமாற்றத்திற்கு எதிராக அகிம்சை வழி போராட்டம்;மாணவர் ஒன்றியம் அறிவிப்பு"
แสดงความคิดเห็น