ஆயுதங்கள் சில புதுக்குடியிருப்பில் கண்டெடுப்பு! // வில்பத்திலிருந்து புலிகளின் ஆயுதங்கள், உணவுப்பொருட்கள் மீட்பு!

வில்பத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் என்பன வவுனியா பொலிஸாரால் தோண்டி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆயுதங்கள், உணவுப்பொருட்கள் என்பன போர் நிறைவுக்கு வரமுன்னர் மன்னார் சிலாவத்துறை இராணுவ முகாமைத் தாக்குவதற்காக புலிகளால் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸ் தரப்பு தெரிவிக்கிறது. 25கிலோ எடையுடைய கிளைமோர் குண்டுகள், தகரத்திலடைக்கப்பட்ட உணவு, சீனி, குளுக்கோஸ், பிஸ்கட், மீன் ஆகியவையே இவ்வாறு தோண்டியெடுக்கப் பட்டுள்ளதாகவும் இராணுவத்திடம் சரணடைந்துள்ள விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இது மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதுக்குடியிருப்பின் இரணைப்பாலை பிரதேசத்திலிருந்து மேலும் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பாளருக்கு உளவுப்பிரிவு அறிக்கைகள் கிடைத்ததையடுத்தே நேற்றுமுன்தினம் இரவு கண்டெடுக்கப் பட்டுள்ளது. 6.5கிலோ நிறையுடைய ஒருகிளைமோர் மற்றும் 1925 டெட்டனேட்டர்கள் என்பனவே இவ்வாறு கண்டெடுக்கப் பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
0 Response to "ஆயுதங்கள் சில புதுக்குடியிருப்பில் கண்டெடுப்பு! // வில்பத்திலிருந்து புலிகளின் ஆயுதங்கள், உணவுப்பொருட்கள் மீட்பு!"
แสดงความคิดเห็น