இலங்கை அணி 334 ஓட்டங்களுடன் முன்னிலை

இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதலாவது இனிங்சின் முடிவில் 760 ஓட்டங்களை பெற்று இந்தியாவை விட 334 ஓட்டங்களுடன் முன்னிலையில் உள்ளது. அஹமதாபாத்தில் நடைபெற்று வருகிற இப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 426 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதன் போது, நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 591 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் இருந்தது. மஹேல ஜயவர்த்தன 204 ஓட்டங்களுடனும்;, பிரசன்ன ஜயவர்த்தன 84 ஓட்டங்களுடனும்; ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று (வியாழக்கிழமை) 4-வது நாள் ஆட்டத்தின் போது மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 708 ஓட்டங்கள் பெற்றிருந்தது. இது இந்திய அணி பெற்றிருந்த ஓட்டங்களை விட 282 ஓட்டங்கள்; கூடுதலாகும்.
ஜயவர்த்தன 267 ஓட்டங்களுடனும்;, பிரசன்னா ஜயவர்த்தன 134 ஓட்டங்களுடனும்; ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மஹேல ஜயவர்த்தன ஆட்டம் இழந்தார். 435 பந்துகளில் 27 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 275 ஓட்டங்களை பெற்றார். எனவே இவ் இரு வீரர்களும்; இனைந்து பெற்ற இனைப்பாட்ட மூலம் 351 ஓட்டங்களை பெற்று புதிய உலக சாதனை படைத்தனர்.
இதனை தொடர்ந்து களத்தில் இருந்த பிரசன்னா ஜயவர்த்தனே 150 ஓட்டங்களை பெற்றார்;. இதன் போது இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 756 ஓட்டங்களை பெற்றிருந்தது. 7 விக்கெட்டுகளை இழந்து 760 ஓட்டங்களை பெற்றிருந்த போது இலங்கை முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
பின் 334 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியதையடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களை பெற்றுள்ளது. களத்தில் கம்பீர் 74 ஓட்டங்களுடனும் அமித் 12 ஓட்டங்களுடனும் இருக்கின்றனர்.
0 Response to "இலங்கை அணி 334 ஓட்டங்களுடன் முன்னிலை"
แสดงความคิดเห็น