கல்லடி இராணுவ முகாம் பகுதியில் குண்டுவெடிப்பு : ஒருவர் பலி

மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாம் பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவமொன்றில் இராணுவ குண்டு செயலிழக்கும் பிரிவைச்சேர்ந்த சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அப்பிரிவைச் சேர்ந்த இராணுவ லெப்டினன் தர அதிகாரி ஒருவரும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உட்பட மூவர் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த இராணுவ சிப்பாய் லான்ஸ் கோப்ரல் தரத்தைச் சேர்ந்த லலித் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அண்மைக் காலங்களில் தேடுதல் நடவடிக்கைகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட கிளேமோர் உட்பட வெடிப் பொருட்களை முகாம் பகுதியில் உள்ள பயிற்சி மைதானத்தில் வழமை போல் செயலிழக்கச் செய்யும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முதலாவது குண்டு செயலிழக்கச் செய்யப்பட்ட பின்னர் இரண்டாவது தடவை ஒரு சில குண்டுகள் அடங்கிய தொகுதியை செயலிழக்கச் செய்த போது, அது வெடித்து சிதறியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
0 Response to "கல்லடி இராணுவ முகாம் பகுதியில் குண்டுவெடிப்பு : ஒருவர் பலி"
แสดงความคิดเห็น