கமல்ஹாஸனின் ஆசை!

1982-ம் ஆண்டு கே விஸ்வநாத் இயக்கத்தில், இளையராஜாவின் இசையில் உருவாகி, தரத்திலும் வசூலில் புதிய சாதனை படைத்த படம் இது.
ஜெயப்பிரதா, எஸ்பி ஷைலஜா மற்றும் சரத் பாபு ஆகியோர் இந்தப் படத்தில் கமலுடன் நடித்திருந்தனர்.
இந்தப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் காலத்தை வென்றவை. இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்தது இந்தப் படத்துக்காக.
பரத நாட்டியக் கலைஞராக அற்புதமாக நடித்திருந்தார் கமல். இந்தப் படத்தை யாராவது ரீமேக் செய்தால், தான் மீண்டும் அதே வேடத்தில் நடிக்க விரும்புவதாக கமல் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தனது பத்திரிகைப் பேட்டியொன்றில் கமல்ஹாஸன் இதுகுறித்து கூறியதாவது:
சலங்கை ஒலி ஒரு சிறந்த படைப்பு. அந்தப் படத்தை இப்போது யாராவது மீண்டும் எடுத்தால், அதில் நடிக்க தயாராக இருக்கிறேன். எனக்கு 54 வயது ஆகிவிட்டதை பெரிது படுத்த வேண்டாம். வயதைத் தாண்டியது திறமை!
எனது தாய் என்னை நடனகலைஞராக பார்க்க ஆசைப்பட்டார். அதற்காகத்தான் பரத நாட்டியம் கற்றேன். என் தந்தையோ மாடர்னாக வளர்க்க ஆசைப்பட்டார். இருவரது விருப்பத்தையும் நிறைவேற்றி விட்டேன். ஆனால் அதை காண்பதற்கு துரதிஷ்டவசமாக அவர்கள் இல்லை.
சலங்கை ஒலி படம் என் அம்மா வை நினைவு படுத்தும் படமாக அமைந்தது. அப்படத்தில் எனது பரத நாட்டிய அரங்கேற்றத்தை பார்க்காமலேயே தாய் இறந்து விடுவார். அந்த காட்சி என் அம்மா ஞாபகமாவே அமைந்தது..." என்றார் நெகிழ்ச்சியுடன்.
0 Response to "கமல்ஹாஸனின் ஆசை!"
แสดงความคิดเห็น