கருவறைக்குள் அசிங்கம்-அர்ச்சகரை காவலி்ல் எடுக்கிறது போலீஸ்

காஞ்சிபுரம்: மச்சேஸ்வரர் கோவில் கருவறைக்குள் பெண்களுடன் தகாத உறவை மேற்கொண்ட அசிங்க அர்ச்சகர் தேவநாதனை காவலில் எடுத்து விசாரிக்க காஞ்சிபுரம் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இந்த விசாரணை யின்போது எத்தனை பெண்களுடன் கருவறைக்குள் அசிங்கமாக நடந்து கொண்டார் தேவநாதன், அந்தப் பெண்கள் யார் என்ற விவரம் தெரிய வரும்.
கருவறை அசிங்கத்தை நடத்தி விட்டு தலைமறைவான தேவநாதன், நேற்று முன்தினம் காஞ்சீபுரம் முதல் வகுப்பு குற்றவியல் கோர்ட்டில், மாஜிஸ்திரேட் சுதா முன்பு சரணடைந்தார். அவரை வருகிற 30-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதை அடுத்து தேவநாதன், காஞ்சீபுரம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
தற்போது தேவநாதனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக நேற்று காலை காஞ்சீபுரம் முதல் வகுப்பு குற்றவியல் கோர்ட்டில் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் மனுதாக்கல் செய்தார்.
அப்போது தேவநாதன் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ ஆதாரங்களையும் போலீசார் தாக்கல் செய்தனர்.
இதற்கிடையே, தான் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதைப் போன்ற காட்சிகளை தேவநாதன் ஏன் படமாக்கினார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இந்தக் காட்சிகளை வெளிநாடுளுக்கு விற்கும் நோக்கில் இதை அவர் செய்திருக்கலாம் அல்லது சம்பந்தப்பட்ட பெண்களிடம் இதைக் காட்டி மிரட்டி தொடர்ந்து உல்லாசமாக இருக்க திட்டமிட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுதவிர இந்த சம்பவத்தில் வேறு சிலருக்கும் பங்கு இருக்கலாமோ என்ற சந்தேகமும் போலீஸாரிடம் உள்ளது.
தேவநாதனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது இந்த சந்தேகங்களுக்குப் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Response to "கருவறைக்குள் அசிங்கம்-அர்ச்சகரை காவலி்ல் எடுக்கிறது போலீஸ்"
แสดงความคิดเห็น