நியூஸிலாந்து அருகே கடலுக்கடியில் பூகம்பம்

வெலிங்டன்: நியூஸிலாந்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுக்கு அருகே கடலுக்கடியில் இன்று காலை பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதாரங்கள் எதுவுமில்லை.
உள்ளூர் நேரப்படி, காலை 11.47 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் , ஆக்லாந்தில் இருந்து வடகிழக்கில் 730 கி.மீ தூரத்திலும், ரவுல் தீவிலிருந்து தென்மேற்கே 350 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டிருந்ததாக நியூஸிலாந்து புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 Response to "நியூஸிலாந்து அருகே கடலுக்கடியில் பூகம்பம்"
แสดงความคิดเห็น