பிரான்ஸில் பலாத்கார நிதிசேகரிப்பில் ஈடுபட்ட புலிகளுக்கு சிறைத்தண்டனை!

பிரான்ஸ் தமிழ் மக்களிடம் பலாத்கார பண பறிப்பில் ஈடுபட்ட புலிகளுக்கு சிறைத்தண்டனை. பிரான்ஸில் வாழுகின்ற தமிழர் சமூகத்திடம் மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டின் கீழ் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த ஒரு குழுவினருக்கு பிரஞ்சு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பல லட்சக்கணக்கான டொலர்களை இந்தக் குழுவினர் பிரான்ஸில் வாழும் தமிழ் மக்களிடம் மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள புலிகளின் பிரான்ஸ் பொறுப்பாளர் நடராஜா மதிந்திரன் என்பவர் உட்பட 21பேர் இந்த வழக்கின் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளன.
பாரிஸிலும், அண்மைய பகுதிகளிலும் வாழும், பெரும்பாலும் அரசியல் அகதிகளான தமிழர்களிடம், புரட்சிவரி என்ற பெயரில் இந்தப் பணம் அறிவிடப்பட்டதாக அரசதரப்பு வழக்கு தொடுநர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Response to "பிரான்ஸில் பலாத்கார நிதிசேகரிப்பில் ஈடுபட்ட புலிகளுக்கு சிறைத்தண்டனை!"
แสดงความคิดเห็น