jkr

யாழ்.வந்த மக்களுக்கு மீள்குடியேற்றக் கொடுப்பனவுகள் : யூ.என்.எச்.சி.ஆர். ஏற்பாடு


வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட மக்களுக்கான மீள்குடியேற்றக் கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள் யாழ்ப்பாணத்தில் யூ.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தினால் துரிதகெதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணத்திற்கு இதுவரை சுமார் 53 ஆயிரம் குடும்பங்கள் அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், இந்தக் கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கையை யூ.என்.எச்.சி.ஆர் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இதுவரை நெடுந்தீவில் உள்ள 270 குடும்பங்களுக்கும் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் 260 குடும்பங்களுக்கும் மீள்குடியேற்றக் கொடுப்பனவான தலா 20 ஆயிரம் ரூபாவை இலங்கை வங்கியின் உறுதிச் சிட்டைகள் மூலம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து மீள்குடியேற்றத்திற்காக யாழ்ப்பாணம் திரும்பிய மக்களுக்கு உடனடியாக உலர் உணவு அல்லாத பொருட்கள் வழங்கப்பட்டன.

வவுனியா நலன்புரி நிலையங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களில் ஒருபகுதியினர் உரிய இருப்பிடம் இன்றி அலைந்து திரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே உயர் பாதுகாப்பு வலயமான வலி வடக்குப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வன்னி சென்று, மீண்டும் வவுனியா நலன்புரி நிலையத்தின் ஊடாக மீள் குடியேற்றத்திற்காக யாழ்ப்பாணம் திரும்பியவர்களே இவ்வாறு இருப்பிடம் இன்றி தவிக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

ஏற்கனவே உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக வலி வடக்குப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தெல்லிப்பளை, உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக சொந்த இருப்பிடங்களுக்குச் செல்ல முடியாத மக்கள் தங்கியிருப்பதற்கும் கூட வசதிகள் அற்ற நிலையே காணப்படுகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "யாழ்.வந்த மக்களுக்கு மீள்குடியேற்றக் கொடுப்பனவுகள் : யூ.என்.எச்.சி.ஆர். ஏற்பாடு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates