ஒட்டிப் பிறந்த இரட்டையரைப் பிரித்து ஆஸி. மருத்துவர்கள் சாதனை!

தலை ஒட்டிப் பிறந்த பங்களாதேஷ் இரட்டையர்களை 32 மணி நேர அறுவைச் சிகிச்சை செய்து, பிரித்து அவுஸ்திரேலிய மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
பங்களாதேஷைச் சேர்ந்த கிருஷ்ணா, திரிஷ்ணா சகோதரிகளுக்கு 3 வயதாகிறது. இருவரும் இரட்டையர்களாகப் பிறந்தனர்.
தலை ஒட்டிய நிலையில் பிறந்ததால் இருவரையும் பிரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் உள்ள ரோயல் குழந்தைகள் வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர்கள் 24 மணி நேர அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வெற்றிகரமாக இருவரையும் பிரித்துள்ளனர்.
மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை கண்ணும் கருத்துமாக மேற்கொண்டு இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.
அதேவேளை, இவ்வாறான சிகிச்சை முறையானது ஆயுட்காலத்தில் ஒருமுறை மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை என்று இதனை மருத்துவ உலகம் வர்ணித்துள்ளது.
குழந்தைகள் இருவரும் ஒரு வார காலத்துக்கு மயக்க நிலையில் வைத்து கண்காணிக்கப்படவுள்ளனர். அதன் பின்பு பிளாஸ்டிக் சிகிச்சை மூலம் அவர்களுடைய மண்டை ஓடு சீரமைக்கப்படும்.
சத்திர சிகிச்சையைத் தொடர்ந்து, பிரதான சத்திர சிகிச்சை மருத்துவர் வேர்ஜினியா மைக்ஸ்னர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் இது தொடர்பான விபரங்கள் தெரிவிக்கப்பட்டன.
0 Response to "ஒட்டிப் பிறந்த இரட்டையரைப் பிரித்து ஆஸி. மருத்துவர்கள் சாதனை!"
แสดงความคิดเห็น