அஜீத் ஜோடி ஆவாரா ஷம்மு?

பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘காஞ்சிவரம்’ படத்தில் நடித்தவர் ஷம்மு. தெலுங்கில் பிஸியாக இருக்கும் இவர் தமிழில் பிரகாஷ்ராஜின் ‘மயிலு’, நந்தா பெரியசாமியின் ‘மாத்தி யோசி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து இவருக்கு, அஜீத் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தன்னுடைய சினிமா பயணம் குறித்து ஷம்மு கூறுகையில்,
“மயிலு’ படத்தின் படப்பிடிப்பு முடிய இருக்கிறது. இதில், நான் கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறேன். நந்தா பெரியசாமியின் ‘மாத்தி யோசி’ வெளியிடலுக்கு காத்திருக்கிறது. காஞ்சிவரம் படத்திற்கு அடுத்ததாக நிறைய கதைகள் கேட்டு விட்டேன். தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கவும் கேட்டார்கள். தெலுங்கில் மூன்று படங்களில் புக் ஆகி உள்ளதால் தமிழ் வாய்ப்புகளை இழந்துவிட்டேன். தமிழ் சினிமாத்தான் பிடித்திருக்கிறது. ‘காஞ்சிவரம்’போன்ற கேரக்டர் ரோலில் நடிக்க விருப்பம் இருக்கிறது” என்றார்.
0 Response to "அஜீத் ஜோடி ஆவாரா ஷம்மு?"
แสดงความคิดเห็น