jkr

தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்விலும் பரிசளிப்பு விழாவிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

சாவகச்சேரி பிரதேச சபையும் நாவற்குழிப் பிரதேச பொது நூலக ஆலோசனை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடாத்திய தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்விலும் பரிசளிப்பு விழாவிலும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நாவற்குழி பொது நூலகத்தில் சாவகச்சேரிப் பிரதேச சபைச் செயலாளர் வே.சிவராஜலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆலோசனை அபிவிருத்திச் சபை உறுப்பினர் ஏ.டயஸ் உரை நிகழ்த்தும் போது நாவற்குழிப் பகுதிப் பாடசாலைகளில் கணனிகள் இல்லை என்றும் கல்வி கற்கும் பிள்ளைகளுக்குப் பாடசாலைகளிலுள்ள அடிப்படை வசதிகள் பற்றாக்குறையாகக் காணப்படுவதாகவும் தையல் பயிற்சி பெற்ற யுவதிகளுக்கு எத்தகைய உதவிகளும் வழங்கப்படாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்ததுடன் இந்நிலைமைகளைக் கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அல்லும் பகலும் மேற்கொண்டு வரும் மக்கள் பணிகளை மேலும் முன்னெடுக்கும் விதத்தில் அனைவரும் ஒன்றுபட்டு அவரது கரங்களைப் பலப்படுத்துவதின் மூலமே தமிழ் பேசும் மக்களின் அடிப்படைத் தேவைகள் அபிவிருத்தி நடவடிக்கைகள் வாழ்வாதாரப் பிரச்சினைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் ஆலோசனை அபிவிருத்திச் சபை உறுப்பினர் டயஸ் மேலும் தெரிவித்தார்.

தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களை வழங்கிக் கௌரவித்து உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இப்பகுதிப் பாடசாலைகளின் தேவைகள் மற்றும் இப்பகுதியின் அடிப்படை வசதிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களைக் கவனத்தில் எடுப்பதாகவும் எதிர்வரும் காலத்தில் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்வதாகத் தெரிவித்ததுடன் கடந்த காலத்தில் தவறான தமிழ் தலைமைகளின் பின்னால் மக்கள் சென்றதனால் தற்போது பாரிய அழிவுகளுக்கும் இடப்பெயர்வுகளுக்கும் முகம் கொடுக்க நேர்ந்துள்ளதாகவும் எதிர்காலத்தில் மக்களின் நலன்களை முன்னிறுத்தி அழிந்து போன எமது தேசத்தை மீளவும் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைக்கும் ஜனநாயகத் தலைமைகளை இனங்கண்டு மக்கள் ஓரணியில் திரள்வதன் மூலமே சுபீட்சமான எதிர்காலத்தை வென்றெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்விலும் பரிசளிப்பு விழாவிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates