பாக்டீரியா மூலம் கண்ணிவெடியைக் கண்டுபிடித்து அமெ. விஞ்ஞானிகள் சாதனை

மண்ணில் புதைத்துவைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை பாக்டீரியா மூலம் கண்டுபிடித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
ஒருவித நிறமற்ற ரசாயனத்துடனான ஒருவகை பாக்டீரியா கலந்த கரைசலுக்கு கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் திறன் உண்டு என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.
எங்காவது கண்ணிவெடிகள் இருப்பதாகச் சந்தேகப்பட்டால் அந்த இடத்தில் தற்போது கண்டுபிடித்துள்ள பாக்டீரியா கரைசலைத் தெளிக்க வேண்டும். கண்ணிவெடி இருக்குமானால் அந்த இடத்தில் பச்சை நிறமாகத் தோன்றும். இல்லையேல் கரைசல் எவ்வித மாற்றத்தையும் உருவாக்காது.
இதை வைத்து ஓரிடத்தில் கண்ணிவெடி உள்ளதா, இல்லையா என்பதைக் கண்டுபிடித்து விடலாம் என்கின்றனர் அந்த விஞ்ஞானிகள்.
"தற்போதைய நிலையில் கண்ணிவெடி கண்டுபிடிக்கும் சோதனைக்கு அதிக செலவிட வேண்டியுள்ளது. ஆனால் நாங்கள் கண்டுபிடித்துள்ள பாக்டீரியா கரைசல் சோதனை மூலம் குறைந்த செலவில் கண்ணிவெடியை கண்டுபிடித்துவிடலாம்.
அத்துடன், கண்ணிவெடியைக் கண்டுபிடிக்க உதவும் இரசாயனம் மற்றும் பாக்டீரியாவால் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை" என்றும் அந்த விஞ்ஞானிகள் கூறினர்.
"உலகம் முழுவதும் ஆண்டுக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை கண்ணிவெடித் தாக்குதலில் பலியாகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இது வேதனை தரக்கூடியது.
இந்நிலையில் கண்ணிவெடித் தாக்குதல் அதிகம் நிகழும் நாடுகளுக்கு எங்களது கண்டுபிடிப்பு பாரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்" என்றும் அந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
0 Response to "பாக்டீரியா மூலம் கண்ணிவெடியைக் கண்டுபிடித்து அமெ. விஞ்ஞானிகள் சாதனை"
แสดงความคิดเห็น