நிவாரணக்கிராம மக்களின் சுதந்திர நடமாட்டம். பான் கீ மூன் வரவேற்பு.

வவுனியா நிவாரணக்கிராமங்களில் உள்ள மக்களுக்கு சுதந்திர நடமாட்ட அனுமதி வழங்கப்பட்டமையை ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.
சுதந்திர நடமாட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களிலேயே குடியமர்த்தப்படும் நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்கள் தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்பதுடன் எந்த நிலையிலும் இடம்பெயர்ந்த மற்றும் மீள் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தை அறிவுறுதியுள்ளார்.
0 Response to "நிவாரணக்கிராம மக்களின் சுதந்திர நடமாட்டம். பான் கீ மூன் வரவேற்பு."
แสดงความคิดเห็น