jkr

புலம்பெயர் பெண்மணிகளே!!! உங்களை நீங்கள் பேணிக்காக்கா விட்டால் உங்களை, வைத்தியர் சுற்றவேண்டிய துர்பாக்கியம் ஆகிவிடும்;!!!


உண்டிசுருங்குதல் பெண்டிற்கழகு“ என்ற வசனத்தை தாயகத்தில் கேட்ட ஞாபகம்! எமக்கு அறுசுவையும் சமைத்து தந்த தாய் சொன்னவிடையங்களை நாம கேட்டு என்றும் ஒழுகியிருந்தால். இன்று, வைத்தியர்கள் என்றும், பருமன் குறைப்பு என்று பல நோய்களுக்கு பலவழிகளில் பணத்தை விரையம் செய்ய வேண்டிய அவசியம் இருந்திருக்காது. எனினும் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் கோவில்கள் மற்றும் தமிழ்பாடசாலைகள் இத்தகைய நற்பழக்கத்தை இதுவரை காலமும் முன்னெடுக்காது இருப்பது தமிழர்கள் செய்த துர்பாக்கியம். இன்றைய தாய்மார்களுக்குத் தெரியாத விடையங்களை மாணவ மாணவிகளுக்கு பகிர்ந்து கொடு;க்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ் ஆசிரிய ஆசியர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் சந்தர்ப்பம் பார்த்து பணத்தை மட்டும் எப்படி புடுங்குவது என்ற நிலைக்குள் இன்று தள்ளப்பட்டு விட்டார்கள் என்பதால், எமது சமூகம் என்றும் பணத்தை மட்டும் குறிவைத்து எதையும் செய்யும் என்ற நிலை அதிகம் புலம் பெயர் நாடுகளில் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதனால் இன்றைய வளரும் இளையவர்களும் பணத்திற்கே அலைகின்றார்கள். இது எம்மினம் செய்த துர்பாக்கியம். பணத்தை மட்டும் புடுங்கும் விடையங்களில் எம்மை தயார் செய்து கொண்டு தமிழ் என்றும், சமயம் என்றும் கொக்கரித்துக் கொண்டு உள்ள எமது சமூகம் பலவழிகளில் அழிந்து போகின்றது. என்பது, தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவம் அதிகவணம் எடுக்கவில்லை. என்று, பலமூத்தோரின் கவலை என்பதை மீண்டும் சுட்டிக்காட்டும் „ஈரனல்“ என்றும் தயங்காது. புஜம் என்றால் தோள், புஜங்கள் என்றால் சர்ப்பம். இந்த புஜங்காசனமானது ஒரு பாம்பு படம் எடுத்து நின்றால் எப்படி இருக்குமோ அப்படியே காட்சியளிக்கிறது. இதில் 15 வகை புஜங்காசனங்கள் உண்டு. இவற்றை ஒவ்வொரு மனிதனும் தினமும் செய்தால் அதில் பல பயன்கள் உண்டு. இதை தென்னிலங்கை தமிழ் பத்திரிகையான „வீரகேசரி“ தந்துள்ளது. செய்முறை: 1. முதலில் ஒரு துணியை விரித்து குப்புறப் படுத்துக் கொள்ளுங்கள்.
2. இரண்டு கைகளையும் முழங்கையடியில் மடக்கி இடது கைவிரல்களின் மீது வலது கை விரல்களை வைத்துக் கொள்ளவும்.
3. கைவிரல்களுக்கு மேலே நாடியை (கவாய் கட்டை) வைத்து படுத்து இளைப்பாறவும். இரண்டு ஆழமான மூச்சை இழுத்து விடவும்.
4. இரண்டு கைகளையும் எடுத்து இடுப்பின் வலது பக்கம் வலது கையையும் இடுப்பின் இடது பக்கம் இடது கையையும் (உள்ளங் கைகளை) நன்றாக ஊன்றிக் கொள்ளுங்கள்.
5. கழுத்தை மட்டும் உயர்த்தி முன்னால் அண்ணாந்து பாருங்கள்.
6. இந்த நிலையில் கண்களை எவ்வளவு தூரம் உயர்த்திப் பார்க்க முடியுமோ அவ்வளவு தூரம் பாருங்கள். இந்த நிலையில் கண்களை மூடி ஒரு நிமிடமாவது நிற்கப் பழகவும். பின்னர் மெதுவாக தலையை கீழே இறக்கி நாடியை நிலத்தில் வைக்கவும்.
7. இப்போது உள்ளங்கைகளை விலா எலும்பின் கடைசிப் பகுதிக்கு பக்கவாட்டில் வைக்கவும்.
முழங்கைகள் வெளிநோக்கி சயாமல் இரண்டு கை புஜங்களும் ஒன்றுக்கு ஒன்று சமாந்தரமாக இருக்கட்டும்.
8. மூச்சினை உள் இழுத்த வண்ணம் முகத்தை நிமிர்த்தி உள்ளங்கைகளை சற்று அழுத்தி தலையை தூக்கி தோள் பகுதியை மேலே தூக்க வேண்டும். உள்ளங்கையிலிருந்து தோள்பட்டை வரை கையில் எந்த இறுக்கம் இல்லாமல் முதுகை கொஞ்சம் கொஞ்சமாக மேல் நோக்கி வளையுங்கள்.
இச் சமயத்தில் சாதாரண நிலையில் சுவாசிக்கவும்.
9. தலை, நெஞ்சுப் பகுதியை கீழே இறக்கும் போது மூச்சை வெளிவிட்ட வண்ணம் மெதுவாக இறக்குங்கள்.
நேர அளவு: இறுதி நிலையை (8 ஆம் நிலை) அடைந்ததும் 20 வினாடிகள் சாதாரண சுவாசத்தில் நிற்கவும்.
பழகப் பழக ஒரு நிமிட நேரம் வரை நிற்கலாம்.
சுவாசம்: உடம்பை மேலே தூக்கும் போது உட்சுவாசிக்கவும். இறுதி நிலையில் சாதாரண சுவாசத்தில் நிற்கவும் இறுதி நிலையின் 20 வினாடி முதல் 1 நிமிடம் வரை நிற்க முயலவும்.
உடம்பை கீழே இறக்கும்போது வெளி சுவாசிக்கவும்.
குறிப்பு கால் பாதங்கள் சேர்ந்து இருக்க வேண்டும்.கால் விரல்கள் பின்னோக்கி நீட்டப்பட்டிருக்க வேண்டும். தொப்புளில் இருந்து கால் வரையிலும் விப்பில் ஒட்டியவாறே வைத்துக் கொள்ளவும். இறுதி நிலையில் கண்மணிகள் மேல் நோக்கியவாறு கண்கள் மூடிய நிலையிலும் இருக்க வேண்டும். உங்களால் முடியுமான அளவிற்கே உடம்பை வளைத்து மேல் உயர்த்த வேண்டும். முழங்கைகள் உடம்புடன் சேர்ந்து இருக்க வேண்டும். முடிந்த அளவு முழங்கைகளை நேராக்க முயலவும்.
மனோ நிலை இடுப்பு, கால் தொடைகள், கால்பாதம் நிலத்திலேயே இருக்கின்றன என்ற எண்ணம் கவனிக்க வேண்டியதொன்றாகும். இடுப்பு தசைகளை சுருக்குகிறேன், கால் தொடைகளை இறுக்கி வைத்திருக்கிறேன். முழங்கால்கள் நீட்டப்பட்டு நிலத்தில் பட்டும் படாமலும் இருக்கின்றன போன்ற எண்ணங்கள் மனதில் இருக்கட்டும்.
பலன்கள் 1. முதுகெலும்பு நன்றாக தூண்டப்பட்டு உடம்பில் சுறுசுறுப்பு தன்மை ஏற்படும்.
2. சளி சம்பந்தமான நோய்கள், டி.பி., ஆஸ்துமா வராமல் இருப்பதோடு இந்த நோய் உள்ளவர்களுக்கு இந்த ஆசனம் ஒரு சிறந்த நிவாரணியாக இருக்கும்.
3. மார்பு எலும்பு வியும். பிராண சக்தி உடம்பில் அதிகம் சேரும்.
4. ஜீரணக் கோளாறுகளில் இருந்து விடுபடலாம்.
5. பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
6. இடைப்பகுதி (இடுப்பு) மெலிந்து பலமடைகிறது.
7.இரண்டு தோல்களும் வலுவடைந்து கழுத்து உறுதி பெற்று பிட வலுவுள்ளதாகிறது.
8. கூனல் வராமல் தடுக்கிறது. முதுகெலும்பை வலிமை பெறச் செய்கிறது.
9. குதிக்கால்களில் உள்ள நோவை அகற்றும்.
10. உடலில் சேர்ந்து இருக்கும் அலுப்பு, சோம்பல், மந்த தன்மைகளை இல்லாமல் செய்யும்.
11. உற்சாகம் சுறுசுறுப்பும் உள்ள மனிதனாக இந்த ஆசனம் செய்பவரை மாற்றி அமைக்கிறது.
12. மூளையில் இருந்து முதுகெலும்புக்குள் வரும் மைய நரம்புத் தொகுதியைத் நல்ல இயக்க நிலைக்கு கொண்டு வந்து உடலினுள் இருக்கும் எல்லா உறுப்புகளையும் நல்ல நிலையில் இயங்க இந்த ஆசனம் உதவுகிறது.
13. இதயம், ஈரல், இரப்பை, சிறுநீரகங்களின் தொழிற்பாட்டை மேம்படுத்துகிறது.
14. மாணவர்களுக்கு நல்ல மன ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்துகிறது.
எச்சரிக்கை: அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு தான் இந்த ஆசனத்தைச் செய்ய முயல வேண்டும்.முதுகெலும்பில் விலகல் உள்ளவர்கள் ஒரு யோகா சிகிச்சை நிபுணன் ஆலோசனையுடன் செய்து வர குணமடையலாம். மாற்றாசனம் ஹலாசனம் அல்லது பஸ்சிமோத்தாசனம் செயயலாம்.இதைவிட முக்கியம் அழகுசாதனங்களும், அழகுப்பொட்களும், முகஅழங்காரமும், சிகையழங்காரமும், பூச்சுக்களும் மலிவுவிற்பனை ஆடை அணிகளும் வாங்கி அணிய முன் எமது உடல் பருமன் குறைந்திருந்தால் இயற்கையின் அழகு என்றும் „நோயற்றவாழ்வும் குறைவற்ற செல்லவத்தையும்“; அள்ளித்தரும் என்று இன்றாவது நம்புகள் என் அருமை தாய்மார்களே!!!
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "புலம்பெயர் பெண்மணிகளே!!! உங்களை நீங்கள் பேணிக்காக்கா விட்டால் உங்களை, வைத்தியர் சுற்றவேண்டிய துர்பாக்கியம் ஆகிவிடும்;!!!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates