சிறுமிமீது துஷ்பிரயோகம் : மாத்தறையில் சட்டத்தரணி ஒருவர் கைது

சிறுமி ஒருவர்மீது துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக மாத்தறை பகுதியில் சட்டத்தரணி ஒருவரை தேசிய சிறுவர் பராமரிப்பு அதிகார சபையின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்தச் சட்டத்தரணி சுமார் ஒரு வருட காலமாக குறித்த சிறுமியை பெற்றோரிடமிருந்து பிரித்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தேசிய பாராமரிப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
13 வயதான இந்தச் சிறுமியின் பெற்றோர், குறித்த சட்டத்தரணியின் தோட்டமொன்றில் வேலை செய்து வருபவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
சுமார் 65 வயதான சந்தேக நபர், காலி நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 Response to "சிறுமிமீது துஷ்பிரயோகம் : மாத்தறையில் சட்டத்தரணி ஒருவர் கைது"
แสดงความคิดเห็น