jkr

அன்று பத்மநாபா உருவாக்கிய ஐக்கியத்தை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்:சிவசக்தி ஆனந்தன்


"ஈழ தேசிய விடுதலை முன்னணியை உருவாக்குவதில் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் மறைந்த செயலதிபர் பத்மநாபா பெரும் முனைப்பைக் காட்டியிருந்தார். அதேவழியில் எமது கட்சியானது தற்போதைய அரசியல் சூழலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதிலும், அதனைத் தொடர்ந்து பேணிச் செல்வதிலும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது"என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் மறைந்த செயலதிபர் நா.பதம்மநாபாவின் 58 ஆவது பிறந்த தின வைபவத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் மன்னார் மாவட்டக் கிளையில் அக்கட்சியின் மன்னார் மாவட்டச் செயலாளர் குமரேஸ் தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது.

அங்கு உரையாற்றிய என்.சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவிக்கையில்,

"போரினால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக நாம் ஐக்கியப்பட வேண்டியது அவசியம் என்பதை பத்மநாபா அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதனடிப்படையிலேயே தமிழ் மக்களின் ஐக்கியத்திற்கான எமது பங்களிப்பை ஆத்மசுத்தியுடன் வழங்கி வருகின்றோம்.

சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல் என்ற ஜனநாயகப் பண்புகளை எமது நெஞ்சில் சுமந்து செல்லும் நாங்கள் சமகால அரசியலில் ஐக்கியத்தின் அவசியத்தை நன்கு உணர்ந்துள்ளோம்.

இதனடிப்படையில் எமது தமிழ் தேசிய கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டிருக்கின்றோம்.

எமது மக்களை நிவாரண கிராமங்களிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக நாம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நாடாளுமன்றத்திற்குள்ளேயும் - வெளியேயும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகவே இன்று துரிதகதியிலான மீள்குடியேற்றம் இடம்பெறுகின்றது.

இவ்விடயத்தில் எம்முடன் இணைந்து அல்லது எமது அழுத்தங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அனைவரையும் நாம் இங்கு நன்றியோடு நினைவு கூர்கின்றோம். மீள்குடியேற்றம் நடைபெறுகின்ற அதேவேளையில் எமது மக்களுக்கான நிவாரண நடவடிக்கைள் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெறவேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றோம்" என்றார்.

அங்கு உரையாற்றிய ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் மன்னார் மாவட்டச் செயலாளர் இங்கு உரையாற்றுகையில்,

"பத்மநாபா அவர்கள் எமது இயக்கத்தை மட்டுமன்றி அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் அமைப்புக்களையும் தலைமைதாங்கும் ஆற்றல் பெற்றிருந்தார்.ஐக்கியத்திற்கும் ஜனநாயகத்திற்கும் அவர் ஆற்றிய பணி அளப்பரியது. அவரால் அன்று உருவாக்கப்பட்ட ஐக்கியம்தான் இன்று தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாவதற்கான அத்திவாரமாகும். அவர் எமக்கு விட்டுச் சென்றுள்ள பணியினை ஐக்கியம் என்னும் தளத்தில் நின்று தளராது முன்னெடுப்பதே நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி" எனக் கூறினார்.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தனது சிறப்புரையில்,

"நாபா என்னும் மனிதனைப் போன்றதொரு சிறந்த தலைவனை, சிறந்த ஜனநாயகவாதியை, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் மனிதநேய சிந்தனையாளனை, அரவணைத்துச் செல்லும் ஒரு அற்புத மனிதனை எமது சமூகம் இழந்து விட்டது. இது எமது சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு" என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "அன்று பத்மநாபா உருவாக்கிய ஐக்கியத்தை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்:சிவசக்தி ஆனந்தன்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates