அரசியல் தீர்வே எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் - பிரணாப் முகர்ஜி

இலங்கையில் அரசியல் தீர்வு மூலம் மட்டுமே மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றமுடியுமென இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அரசியல் தீர்வுத் திட்டமொன்று ஏற்படுவதன் மூலமே இன - மத அடையாளங்களால் வேறுபட்டுள்ள மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்ற, மறைந்த லக்ஷ்மன் கதிர்காமரின் 4வது நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுப் பேருரை ஆற்றியபோதே அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க, வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம உட்பட பெருமளவிலானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 Response to "அரசியல் தீர்வே எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் - பிரணாப் முகர்ஜி"
แสดงความคิดเห็น