jkr

சுவிஸ் சென்றடைந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆரவாரமான வரவேற்பு.


ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுவிஸ் சென்றடைந்தபோது சுவிற்சலாந்தின் சூரிச் சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு ஆரவாரமான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் நேரப்படி இரவு 9.30 மணியளவில் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விமான நிலையத்தினை வந்தடைந்தபோது அங்கு அவருக்காக காத்திருந்த ஈபிடிபி கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கரகோசம் எழுப்பியதுடன் கைலாகு கொடுத்தும் மகிழ்ச்சியுடனும் தோழரை வரவேற்றனர்.

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர்வரும் சனி அல்லது ஞாயிறு தினத்தன்று சுவிஸ் வாழ் புலம் பெயர் உறவுகளை சந்தித்து மனம் திறந்த கருத்து பரிமாற்றங்களை நடத்துவதற்கான நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சமகால மற்றும் எதிர்கால அரசியல் நிகழ்வுகள் குறித்தும் தமிழ் பேசும் மக்களுக்கான சாத்தியமான எதிர்கால அரசியல் தீர்வு குறித்தும் புலம் பெயர் உறவுகளின் கருத்துக்களும் ஆரோக்கியமான விமர்சனங்களும் அதில் கலந்துரையாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "சுவிஸ் சென்றடைந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆரவாரமான வரவேற்பு."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates