தேர்தல் செயலகத்துக்கு இன்று முதல் விசேட பாதுகாப்பு

தேர்தல் செயலகத்துக்கு இன்று முதல் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜனவரி மாதம் முடிவடையம் வரை இந்த விசேட பாதுகாப்பு அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் திணைக்களத்தின் பிரதான செயலகத்துக்கு முன்பாக பொலிஸ் சோதனை முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 15 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெலிகட பொலிஸார் இந்தச் சோதனை முகாமுக்கு பொறுப்பாகச் செயற்படுவர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இதுவரையில் 12 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.
0 Response to "தேர்தல் செயலகத்துக்கு இன்று முதல் விசேட பாதுகாப்பு"
แสดงความคิดเห็น