வன்னி பிரதேச தொண்டர் ஆசிரியர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தித்தார்.
.jpg)
இன்று காலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ். பணிமனைக்கு வருகை தந்திருந்த வன்னி பிரதேசத்தைச்; சேர்ந்த சுமார் 500ற்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தவறான தமிழ்த் தலைமைகளின் வழிநடத்தலின் விளைவாக மக்கள் எதிர்கொண்ட சொல்லொணா துன்பங்களின் அனுபவத்தைச் சரியாக செரிமானம் செய்து கொண்டு எதிர்காலத்தில் நேர்மையாக தமிழ் தலைமை ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்ததுடன் அடிப்படை சுதந்திரங்கள் அனைத்தையும் இழந்து புலித் தலைமையின் கீழ் நடைப்பிணமாக வழிநடத்தப்பட்ட மக்களை மிகப்பெரும் விலை கொடுத்து அரசாங்கம் மீட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த நேர்மையான அமைதியான சூழலை யாருக்கும் தாரைவார்த்து விடாமல் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வது அனைவரதும் பொறுப்பான பணி எனத் தெரிவித்ததுடன் எதிர் காலத்தில் உங்கள் அனைத்து அடிப்படை சுதந்திரங்களையும் பாதுகாத்துக் கொண்டு உங்களின் வாழ்வை வளமானதாக அமைத்து கொள்வதற்கு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் உரிய ஒத்துழைப்பினை வழங்குவதின் ஊடாக உங்கள் அனைவரினதும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதும் நிம்மதியான சுபீட்சமானதுமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.
வன்னி பிரதேச தொண்டர் ஆசிரியர்களின் இக்கட்டான நிலைமையை கவனத்திற் கொண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் விஷேட அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைச் சமர்ப்பித்து நேர்முகப் பரீட்சையை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தேர்தல் முடிவடைந்த பின்னர் நியமனக் கடிதங்களை வழங்குவதற்கு ஜனாதிபதியுடனும் கல்வி அமைச்சருடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வன்னி தொண்டராசிரியர்கள் மத்தியில் உரையாற்றும்போது மேலும் தெரிவித்தார்.
வன்னி தொண்டராசிரியர்களுடனான இன்றைய சந்திப்பின்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் முன்னாள் வடகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரான திரு.இ.விசாகலிங்கம் ஈபிடிபியின் வெளிவிவகார பொறுப்பாளர் தோழர் மித்திரன் ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
0 Response to "வன்னி பிரதேச தொண்டர் ஆசிரியர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தித்தார்."
แสดงความคิดเห็น