எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் வாக்களிக்கத் தவறும் பட்சத்தில் வாக்குகள் மோசடி செய்யப்படலாம் -இரா.துரைரெத்தினம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் வாக்களிக்கத் தவறும் பட்சத்தில் வாக்குகள் மோசடி செய்யப்படலாம் அல்லது விரும்பாத ஒருவர் தெரிவாகுவதற்கு உதவியாக அது அமைந்து விடலாமென ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) அமைப்பின் தலைவரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைத்தினம் தெரிவித்துள்ளார். அப்படி வாக்களிப்பதென்றால் தமிழ்மக்களின் அபிலாசைகளுக்கு உடன்பாடு உள்ளவரை ஆதரிக்கலாம். 1. வடக்கு கிழக்கு இணைய வேண்டுமா? அல்லது பிரிய வேண்டுமா? என்பது தொடர்பாக அரசு தீர்மானிக்க முடியாத பட்சத்தில் கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அதனை தீர்மானித்தல் வேண்டும். 2. தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் தொடரும் திட்டமிட்ட குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். அத்தோடு அரசகாணி தொடர்பான நிலையான கொள்கை வகுக்கப்பட வேண்டும் .3. அரசியல் யாப்பின் 13வது திருத்தச்சட்டம் காலத்திற்கு ஏற்றவகையில் திருத்தப்பட்டு கிழக்கு மாகாணசபை பூரணத்துவமான சபையாக இயங்கும் வகையில் அதிகாரங்களை உடனடியாக வழங்க ஆவனசெய்ய வேண்டும் . 4.1982ம் ஆண்டிற்கு பின்னர் இடம்பெயர்ந்த சகலமக்களும் சொந்த கிராமங்களில் மீளக்குடியேற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 5. வட கிழக்கில் நிர்வாகத்துறையில் இராணுவ மயமாக்கல் மற்றும் பாதுகாப்பு வலயம் போன்ற செயற்பாடுகள் மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Response to "எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் வாக்களிக்கத் தவறும் பட்சத்தில் வாக்குகள் மோசடி செய்யப்படலாம் -இரா.துரைரெத்தினம்!"
แสดงความคิดเห็น