பயங்கரவாதத்தை வென்றவன் ஜனநாயகத்தையும் வெல்வேன் -வேட்பாளர் பொன்சேகா தெரிவிப்பு

வரலாற்றில் நான் பயங்கரவாதத்தை வென்றவன் மக்கள் என்னை சுற்றியிருப்பதனால் ஜனநாயகத்தையும் வெற்றிகொள்வேன். என்று எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
தேர்தல்கள் செயலகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு வெளியேறுகையில் செயலகத்திற்கு வெளியே குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு மத்தியிலிருந்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறுகையில், மக்கள் என் பின்னால் திரண்டிருக்கின்றனர். பயங்கரவாத்தை தோல்வியடையச் செய்த நான் ஜனாநாயகத்தையும் வெற்றிக்கொள்வேன். அதன் மூலமாக நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போன். மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைத்து நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழும் வகையில் நல்லாட்சியை ஏற்படுத்துவேன் என்றார்.
0 Response to "பயங்கரவாதத்தை வென்றவன் ஜனநாயகத்தையும் வெல்வேன் -வேட்பாளர் பொன்சேகா தெரிவிப்பு"
แสดงความคิดเห็น